வியாழன், 29 டிசம்பர், 2016

பாட்டாளிகளுக்கான கட்சி::--


நான் சுமார் எட்டு வயது முதல் #மருத்துவர்_அய்யாஅவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் நலனுக்காக பல்வேறு இயக்கங்களை உருவாக்கிய தலைவர், தமிழினத்திற்காக இன்று வரையிலும் போராடிய ஒரு #போராளி.

தமிழையும், மொழி சார்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை நேசிக்கிற ஒரு #பண்பாளர்.

சமுக நீதி போராளியாக தன்னைத்தானே விசுவருபம் எடுத்த #பிதாமகன்.

ஆண்ட, ஆள்கிற திராவிட கட்சிகளை புள்ளி விவரங்களோடு விமரிசனம் செய்து குலை நடுங்க செய்கிற #சிம்ம_சொப்பனம்.

இத்தனை சிறப்புகள் இருந்தாலும், பாட்டாளிகளான நாங்கள் மருத்துவர் அய்யா அவர்களை குனிந்து வணங்கியதில்லை.

நேர் கொண்ட பார்வையுடன், அய்யா அவர்களின் கண்களை கண்டு. நிமிர்ந்த நெஞ்சோடு வணங்கியுள்ளோமே தவிர இது வரையிலும் வணக்கம் செலுத்துவதற்காக யாரும் அவருடைய கால் நகங்களை கூட தொட்டது கிடையாது.

ஓட்டப்பந்தய வீரனைப்போல் ஓடி விழுந்து வணங்கும் கட்சி தொண்டர்களை காட்டிலும், பாமக தொண்டன் தன்மானமுள்ளவன்.

#தோல்வி_என்பது_நிரந்தரமில்லை.

#வெற்றி_என்பது_அரிதானதுமில்லை.

#முயற்சி_தன்_மெய்வருத்தக்_கூலிதரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...