ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு அறிக்கை

காவிரி : திமுக துரோகத்தை நிரூபித்தால்

அரசியலில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா?

காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவசாயிகளில் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு, அவை குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறைகூவல் விடுத்திருந்தார். அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத ஸ்டாலின், ஒரு மாவட்ட செயலாளர் மூலம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

திமுக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட செயலர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை நாங்கள் நன்றாக அறிவோம். ஸ்டாலினைப் போன்று எதிர்மறை அரசியல் செய்யத் தெரியாத மனிதர் அவர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளில் பெரும்பாலானவற்றை தமது வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் பயன்படுத்தியிருக்க மாட்டார். மருத்துவர் அன்புமணி மீதான தமது ஆத்திரத்தை தணித்துக் கொள்ள பன்னீர்செல்வத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 50 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தொடங்கி வைத்த கலாச்சாரத்தை திமுக இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவும் நாகரீகப் பாதைக்கு மாற வேண்டும்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்வதைப் போன்று காவிரிப் பிரச்சினையில் திமுக செய்த துரோகங்களுக்கு பதில் கூறுங்கள் என்று கேட்டால், அதை விடுத்து  தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனத்தில் திமுக இறங்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்தின் இன்றைய நிலையை நினைத்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. மீண்டும் சொல்கிறேன்... காவிரிப் பிரச்சினையில் தொடங்கி நெடுவாசல் வரை உழவர்கள் சார்ந்த அனைத்து சிக்கல்களிலும்  திமுக செய்த துரோகங்கள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகளுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? இந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஏற்கத்தக்க வகையில் பதில் கூறி விட்டால் திமுக உழவர்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்பதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து புகார் கூறியவர்கள் மீது அவதூறு பரப்புவது தான் தம்பிகளுக்கு அண்ணா கற்றுக்கொடுத்த கண்ணியக் கலாச்சாரமா?

திமுகவின் காவிரி துரோகம் குறித்து பொது அரங்கில் விவாதத்திற்கு தயாரா? என்று அழைத்தால், எங்கள் தளபதி எப்போதும் பொது அரங்கில் நின்று கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பன்னீர்செல்வத்திடமிருந்து பதில் வருகிறது. என்னவொரு புத்திசாலித்தனமான பதில்? பொது அரங்கில் துண்டுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு நினைத்ததை பேசுவதற்கும், மக்கள் நலன் சார்ந்த சிக்கலில் திமுக செய்த துரோகம் குறித்த ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாற்றுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பதில் கூறுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் பேராசிரியர் போன்ற அவைநாகரீகம் அறிந்த தலைவர்கள் கற்றுக்கொடுப்பது நல்லது.

போர்க்களத்தில் தளபதியாக இருப்பவர்கள் தான் முன்னின்று படைகளை வழிநடத்திச் செல்வார்கள். அது தான் போர் தர்மம். மாறாக பன்னீர்செல்வம் போன்றவர்களை மனிதக் கவசங்களாக முன்னிறுத்தி பின்னால் ஒளிந்து கொள்வது தளபதிகளுக்கு அழகல்ல... பெருமையும் அல்ல. பொதுவிவாதத்திற்கு வரும்படி மு.க.ஸ்டாலினை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பது விளம்பரத்திற்காக அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய சூழலிலும் அவர் இல்லை. சுகாதாரத்துறையிலும், புகையிலை ஒழிப்பு பணியிலும் சாதித்ததற்காக அமெரிக்காவின் புற்றுநோய் சங்கம் வழங்கிய லூதர் டெர்ரி விருது உட்பட 4 சர்வதேச விருது வாங்கிய பிறகும் தன்னடக்கத்துடன் இருப்பது யார்? கெண்டுக்கி விருதை விலை கொடுத்து வாங்கி அதற்காக பாராட்டு விழாக்களை நடத்தியது யார்? என்பதைப் பார்த்தாலே  விளம்பரத்திற்காக அலைபவர்கள் யார்? என்பதை மிகவும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏ.சி. அரசியல் செய்வதாக பன்னீர்செல்வம் கூறியிருப்பது கண்டிக்கத் தக்கது. வாட்டும் வெயிலில் தான் மதுவிலக்கு போராட்டங்களை மருத்துவர் அன்புமணி நடத்தினார்; நான் விரும்பும் சென்னை விழிப்புணர்வு பயணத்தை  சென்னை முழுவதும் மேற்கொண்டார். மாறாக   குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் கலந்தாய்வுகளை நடத்தியதும், சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போதும் கூட குளிரூட்டபட்ட அரங்கத்தில் தான் தங்குவேன் என்று கூறி ரூ.7 லட்சத்துக்கு திருமண அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டதும் ஸ்டாலின் தான் என்பது பன்னீர்செல்வத்திற்கு தெரியாது போலிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக கரும்புத் தோட்டத்திற்குள்  கூட கான்க்ரீட் பாதை அமைத்தால் தான் வருவேன் என்று அடம்பிடித்தவர் தான் உங்கள் தளபதி என்பதை நமக்கு நாமே பயணத்தில் அவருடன் சென்றவர்களிடம் பன்னீர்செல்வம் கேட்டறிய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இறுதி தீர்ப்பு தொடர்பாக வழக்கு தொடுத்ததால் தான் அந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதம் ஆனது என்று பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன்? என்று  கடந்த 2007&ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா எழுப்பிய வினாவுக்கும் இதேபதிலைத் தான் கலைஞர் கூறினார். இந்த விஷயத்தில் ஒரு வழக்கறிஞராக பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவருக்கும்  ஒரு சவால் விடுகிறேன். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டால் ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் அரசியலில் இருந்து விலகத்தயாரா?

பன்னீர் செல்வத்தின் அறிக்கையில் பல இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? திமுகவின் துரோகங்களை சுட்டிக்காட்டி மருத்துவர் அய்யாவோ, மருத்துவர் அன்புமணியோ வினா எழுப்பும் போதெல்லாம் துரைமுருகன், பன்னீர்செல்வம், தாமரைச்செல்வன் போன்றவர்களை வைத்து பதில் தருவதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று கூறுவதும் என்னவிதமான அரசியல்? இவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்கிறார்கள். இது வெட்கக் கேடு அல்லவா?

இறுதியாக ஊழல் வழக்குக்கு அஞ்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்காக திமுகவை  மருத்துவர் அன்புமணி விமர்சிப்பதாக திமுக குற்றஞ்சாற்றியுள்ளது. கூட்டணிக்காக அலைவதும் தமிழகத்திற்கு துரோகம் செய்வதும் திமுகவின் வழக்கம். எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் புகார் மீதான விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக காவிரி உரிமையை தாரை வார்த்த வரலாறும், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவினரை காப்பாற்றுவதற்காக இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொடுத்த வரலாறும் திமுகவுக்கு தான் உண்டு.

சொத்துக்குவிப்பு வழக்கில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு அலைவதை கடலூர் மாவட்டமே அறியும். பொன்முடி, சுரேஷ்ராஜன், பெரியசாமி உள்ளிட்ட 16 திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பில் சிக்கி இன்னும் நீதிமன்றத்திற்கு  அலைந்து கொண்டிருப்பது தமிழகம் அறிந்த வரலாறு. 2ஜி ஊழல் வழக்கில் திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஒன்றரை ஆண்டுகளும், மகளிர் அணி செயலர் 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டது இந்தியாவே அறிந்த உண்மை.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது வழக்கு இருப்பது உண்மை. திமுக மற்றும் காங்கிரசின் தூண்டுதலில் தொடரப்பட்ட அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடித்து வெளிவரும் துணிச்சல் பா.ம.க.வுக்கு உண்டு. ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடுத்த கொள்கை முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. அதே போன்ற அரசியல் துணிச்சல் திமுகவுக்கு இருந்தால் இனிவரும் தேர்தல்களை தனித்து சந்திக்க முன்வர வேண்டும்.!

சனி, 29 ஏப்ரல், 2017

"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"

திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்களே.,

சேலத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வீரபாண்டியார் பெயரை உச்சரித்தார் என்றால் அதற்கு காரணம்., வீரபாண்டியார் இருந்த போதும் சரி., இறந்த பின்பும் சரி மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவிற்கு
நற்பனியாற்றினார்.!

குறிப்பாக சொந்த சமூகத்திற்கு அவர் ஆற்றிய பனியை இன்றும் நம் சமூக மக்கள் பெருமையாக கூறிகொண்டு உள்ளனர்.!

ஆனால் கடலூரில் தங்கள் பனி காரி உமிழும் அளவிற்கு அல்லவா உள்ளது.!
உங்கள் மாவட்டத்திற்கு நீங்கள் செய்தது என்ன.?
சரி., மாவட்டத்தை விடுங்கள்
உங்கள் சமூகத்திற்கு நீங்கள் செய்தது என்ன.??

அப்படி நீங்கள் திறமானவராக இருந்திருந்தால் மு.க .ஸ்டாலின் அவர்கள் ஏன் கடலூரில் என்றோ மறைந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுக்க வேண்டும்.?

"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"

அது தான் தங்களின் தற்பொழுதைய போக்கு.!

திராவிடத்தின் சாதி அரசியல். ..

இன்று  எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் திரு.பன்னீர்செல்வம்  அவர்கள் ,இந்தியாவின் மருத்துவதுறை சாதனையாளர் மரு.அன்புமணி அவர்களை விவாதத்துக்கு அழைத்தாராம்.!

திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு., கடலூர் காரன் என்ற முறையில் நான் தங்களை விவாதத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள்.!
விவாதித்து பார்ப்போம்.!

கடலூர் மாவட்டத்தில் இன்னும் தங்கள் பெயர் சில கெழங்கட்டைகளுக்கு தெரிந்திருக்கிறது என்றால் அது நீங்கள் செய்த மக்கள் பனி அல்ல.! உம் தகப்பனார் மண்ணின் மைந்தர்களுக்கு செய்த கடமை.!

காரணம் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தென்னாற்காடு மாவட்டத்தில்  வன்னியர் வாக்கு மட்டுமே போதும்., வேறு சமுதாயத்து வாக்கு வேண்டாம் என கூறி வெற்றிகண்டவர்.!

அதன் கடமையாகவே சில நற்பனிகளை மாவட்ட மக்களுக்கு செய்திட்டார்.!
அந்த நன்றியினால் சில வயதான கிழட்டு வன்னியர்கள் இன்னும் திமுக வுக்கு கொடி பிடித்து வருகின்றனர்.!

இன்னும் சொல்ல போனால் தங்களை MR.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மகன் என்ற
காரணத்தால் ஆரம்ப காலத்தில் மக்கள் ஆதரித்தனர்.!
அடுத்த கால கட்டத்தில் பனத்தை ஆதரித்தார்களே தவிர தங்களை அல்ல.!

தங்கள் தகுதி., மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை மாவட்ட மக்களை கேட்டால் புட்டு புட்டு வைப்பார்கள்.!

இதையே மருத்துவர் அன்புமணி அவர்களின் மக்கள் நலன் பனிகளை இந்தியா முழுக்க கேட்டு தெரிந்து கொள்ளலாம்.!
இன்று போய் தருமபுரி தொகுதியில் உங்கள் உடன் பிறப்புகளையே கேட்டு பாருங்கள்.!

கூடுதல் சிறப்பாக தங்கள் மீது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தற்பொழுது நிலுவையில் இருக்கும் நில அபகரிப்பு வழக்கு  சிறந்த தங்கள் மக்கள் நலன் பனியை பறைசாற்றும்.!

மேலும் விவரங்களுக்கு விவாதம் பன்ன வாருங்கள்.!  வாருங்கள்.!

தயாரா .?? திரு MRK.பன்னீர்செல்வம் அவர்களே.?

நீங்கள்  தயாரா.??

படம் : திரு M.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.,

சனி, 22 ஏப்ரல், 2017

"வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை"

((அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மை ))

இந்து மதம் இல்லாமல் வன்னியன் வந்தானா? என்றால், 'ஆம்' என்பதுதான் உண்மை.

வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறோம். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் இந்துவாக மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே நாம் வன்னியர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' ஒரு வன்னியன் என்றே நம்புகிறோம். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்கிறார் திரு. அண்ணல் கண்டர். நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார். அவரது பெயரால் அமைந்த சேரமான் பெருமாள் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள்.

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசா பரூர் கச்சிராயர்கள் தான், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள்.

இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதை நண்பர்கள் உணரவும்.

அதைவிட முக்கியமாக வன்னியர்களுக்கு மதத்தை விட வன்னியச் சாமுதாயமே முதன்மையானது என்பதை நினைவில் நிறுத்தவும்.

நாம் எல்லா மதங்களையும் சமமாகவே பார்க்கிறோம்.!

புதன், 19 ஏப்ரல், 2017

உண்மையான நட்பு.

நட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது .!

ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.

துரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு.

துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.

ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா? கோர்க்கவா? என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா? அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.//

இரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள்.!

சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.!

எனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது.!

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஊடக விபச்சாரத்தை தோலுரித்த திரைப்படம்.

கவண்         :- -

நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.!

ஊடக தீவிரவாதிகளின் உன்மை முகத்தினை  தோலுரித்து காட்டிய திரைப்படம்.!

நடைமுறையில் இருக்கும் ஊடக விபச்சாரத்தை தைரியமாக எடுத்துரைத்திருக்கிறது.!

மேலும் ஒரு அதிசிறப்பாக  தமிழகத்தில் இவ்வளவு ஊடகம் இருந்தும் , உன்மை  ஊடகமாக #மக்கள்  மற்றும் பொதிகை சேனல்களை ஊழல் ஊடகத்திற்கு எதிர்ப்பாக இனைக்காட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.!

இவ்வளவு இருந்தும் இந்த திரைப்படம் ஏன் வசூல் சாதனை செய்யவில்லை என யோசிக்கும் போது தான் விபச்சார ஊடகங்களின் உன்மை முகம் மீண்டும் ஒரு முறை மூளையை சிந்திக்க வைக்கிறது.!

எங்களையே எதிர்க்கும் படத்தை நாங்கள் எப்படி விளம்பரம் செய்வது என ஊடகங்கள்
இந்த படத்தை விளம்பர படுத்தாமல் இருட்டடிப்பு செய்து மீண்டும் ஒரு முறை தங்கள் விபச்சார யுக்தியை கையாண்டு இருக்கின்றன..!

சமூக அக்கரை .,சமூக சிந்தனை உள்ள திரைப்படம்.!
நிச்சயம் ஒவ்வொரு சாமானியனும் பார்க்க வேண்டிய திரைப்படம்.!
குறிப்பாக தமிழக மக்கள் பார்க்க வேண்டும்.!

மிக சிறப்பு மக்கள் செல்வன்
  விஜய் சேதுபதி அவர்களின் எதார்த்த நடிப்பு.

                நன்றி.!!!

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...