புதன், 8 மார்ச், 2017

சிதம்பரத்தின் சிவப்பு பக்கங்கள்.:- ஷத்ரியர்களின் சகாப்தம்.!

#சிதம்பரத்தின்_சிவப்பு_பக்கங்கள்

சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் வன்னிய ஜெமின்தார்கள் ஒருகாலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்,
அவர்கள் வீட்டிலிருந்தே தில்லை நடராஜர் கோவில் சாவியை தீட்சிதர்கள் வாங்கி செல்வது வழக்கம்.
யார் எந்த உதவியும் கேட்டாலும் அள்ளி வழங்கிய இந்த வன்னிய ஜமின்தார்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் கட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் இலவசமாக கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்த பிச்சாவரம் ஜெமின்தார்கள் தாங்கள் வெளியே சென்று வர பல்லக்கு பயன்படுத்துவது வழக்கம்.
அந்த பல்லக்கை தூக்க தெற்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்தோரை கூலிகளாக நியமித்தனர்.
ஜமின் போக்குவரத்து மற்றும் பழக்கவழக்கத்தை தெரிந்துக் கொண்ட பல்லக்கு தூக்கிகள் தீய பழக்க வழக்கத்தை ஜமினுக்கு ஏற்படுத்தி, அந்த பலவீனத்தையே சாதகமாக பயன்படுத்தி அதன் மூலமாக சிலபல சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர்.
வாரி வழங்கிய ஜமின் குடும்பத்தை வறுமை கவ்வ, வந்தேரியாக வந்த கூட்டத்தை வசதி கவ்வியது.😢

அடர்ந்த மாங்குரோவ் காடுகளின் வழியாக கடல் போக்குவரத்தை நன்றாக தெரிந்துக் கொண்ட அந்த கூட்டம் அயல்நாடுகளில் இருந்து கடல்வழியில் கள்ள'கடத்தலை மேற்கொண்டனர்.
குறிப்பாக போதைபொருட்கள் இங்கிருந்தே தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியானது.
இது அனைத்திற்கும் மாங்குரோவ் காடுகள் வசதியாக அமைந்தது.
முக்கிய வணிக சந்தையாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்கியது.
பணம் பெருகியது. ஊரில் சிறுபான்மையாக வாழும் சமுகம் என்பதால் தெற்கிலிருந்து சில குடும்பங்கள் குடியமர்த்த பட்டனர்.
மேலும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு வராமல் இருக்க பெரும்பாண்மை வன்னியர் மற்றும் பறையர் இன மக்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டனர்.
தொழிலுக்கு மட்டுமல்ல அடிதடி செய்வது ஆரம்பித்து அடாவடி வரை அனைத்தையும் வன்னிய மக்கள் மற்றும் சில பறையர்களை வைத்தே செய்ய ஆரம்பித்தனர்.
ஊருக்குள்ளே மாரியப்பா என்றாலே ஒரு பயத்தை ஏற்படுத்தினர்.
எதிர்ப்போரை அதே சாதி அடியாட்களை வைத்தே கட்டுப்படுத்தினர்.

சிதம்பரத்திற்கு கிழக்கே ஒரு மூளையில் நடைபெற்ற இந்த அடாவடிகள் சிதம்பரம் நகரம் வரை தலைகாட்ட தொடங்கியது.
பணம் "பாலமான் வாய்க்கால்" தாண்டி பாய ஆரம்பித்தது,
வணிக நிறுவனங்கள் நிறைய இவர்கள் பெயரில் முளைக்க ஆரம்பித்தது.
சிதம்பரம் நகரத்தில் இவர்களை எதிர்க்கவே ஆள் இல்லை என்ற அளவிலான நிலைக்கு ஆளானது. காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் சாட்சிகள் இல்லாமல் மரணித்து போனது,
வழக்கு தொடுத்தவர்கள் எதிர்த்தவர்கள் என பல பேர் தலையில்லாத முண்டங்களாக தண்டவாளத்தில் கிடந்தனர்.
அது போன்ற ஒரு கடுமையான நாட்களில் தான் 1975-ல் இந்திராகாந்தி கொண்டுவந்த எமர்ஜென்சி காலம் வந்தது,
இராணுவம் நாடு முழுக்க தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
பல அரசியல் தலைவர்களும், பல தாதாக்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பையில் இருந்த நிழலுலக தாதா, மிகப்பெரும் கடத்தல் மன்னன் மஸ்தான் கைது செய்யப்பட்டான். (இவன் தன்னை விடுவித்தால் இந்தியாவின் கடனையே அடைப்பதாக கூறியவன்). அவனது கைது நாடு முழுக்க நிறைய அதிரடிகளை ஏற்படுத்தியது. அவனை தொடர்ந்து அவனுடன் கடத்தல் தொடர்பில் இருந்தவர்கள் நாடு முழுக்க கைது செய்யப்பட்டார்கள், அப்போது சிதம்பரத்தில் இருந்த அந்த மாஃபியா மாரியப்பாவும் கைது செய்யப்பட்டார்,
சிதம்பரத்தின் தேரோடும் நான்கு வீதிகளிலும் மேலாடையின்றி சிலேட்டில் எழுதப்பட்ட, தான் ஒரு கடத்தல்காரன் என்ற வாசகத்தை சுமந்து போலிசாரால் அழைத்து வரப்பட்டார்.

பிறகு சில காலங்களில் விடுதலையாகி, அரசியல் நிலை மாறியதும் மீண்டும் பழையபடி கடத்தல் தொழில் ஆரம்பமானது.
சாராய தொழில் கொடிகட்டி பறந்தது.
தனது பெயரில் சிதம்பரத்தில் ஒரு நகரை உருவாக்கினார், அவருடைய பெயரிலான நகர் மற்றும் அவருடைய ஊர் பக்கம் வருவோர் அனைவரையும் விசாரித்து தான் அனுப்புவார்கள், சந்தேகம் வரும் பட்சத்தில் அடி மற்றும் மட்டை பன்னும் அளவிற்கும் செல்லும்,
காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கூட அவரது பகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை.

தியேட்டர், மேன்ஷன், ஸ்டார் ஹோட்டல் என சிதம்பரத்தில் நிறைய அவர்கள் பெயரில் முளைத்தது.
மார்க்கெட், பேருந்து நிலைய கடைகள், சைக்கிள் ஸ்டேன்ட், முக்கிய காண்ட்ராக்ட் போன்றவை இவர்களை தவிர்த்து வேறு யாராலும் ஏலம் எடுக்க முடியாது.
எடுத்தால் கொலை செய்யப்படலாமென்ற பயம் மக்களிடம் இருந்தது. தனி ஒரு மனிதனாக எதிர்க்க யவருமின்றி போனதால் மேலும் அட்டகாசம் அதிகமானது.

1985 காலத்திற்கு பிறகு டாக்டர்.ராமதாஸ் என்பவர் வன்னியர்களை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தை உருவாக்கினார், சைக்கிளில் சென்று அனைத்து ஊர்களிலும் கொடியேற்றினார்.
அப்போது வன்னிய மக்களிடம் அவருக்கிருந்த வரவேற்பு மிக அதிகம். டாக்டர் அப்போது மாஃபியா மாரி ஊரிலும் கொடியேற்ற சென்றார்.
கடும் எதிர்ப்பு மாஃபியா தரப்பில் எழுந்தும் எதையும் பொருட்படுத்தாமல் அந்த ஊரில் அக்னிகலச கொடியை பறக்க விட்டார் மருத்துவர்.
இதற்கு காரணமாக இருந்த அந்த ஊர்க்கார வன்னியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
முதன்முதலாக ஒரு வன்னியர் கொலையான சம்பவத்தால் பதற்றம் அதிகமானது.
மக்கள் மாஃபியாவிற்கு எதிராக திரள ஆரம்பித்தனர்.
தனக்கான சங்கம் வந்த பிறகு அடுத்தவனுக்கு எதற்கு அடிபணிய வேண்டுமென நினைத்தனர்.
கொலைக்கு சாட்சிகளும் ஆதாரமும் இல்லை என்றாலும் அந்த கொலையை செய்தது வன்னிய இனத்தை சேர்ந்த மாரியின் கூட்டாளி தான் என தெரிந்துக் கொண்ட மக்கள் அவரை எச்சரித்தனர்.
அவர் எதையும் கேட்காமல் மேலும் வன்னியருக்கெதிரான சில சம்பவங்களை தொடர்ந்து செய்துவர வன்னியர்களில் சிலரே அந்த மாரி கூட்டாளியின் தலையை துண்டாக்கினர்.
அப்போது முதல் பயம் அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. வன்னியர்களை தொட அந்த குழுவில் இருந்த வன்னியர்களே பயந்தனர்.

சில முரட்டு வன்னிய கிராமங்கள் வன்னியர் சங்கத்தின் மூலம் திரண்டு மாரிக்கு எதிராக செயல்பட தொடங்கினர்.
இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் அதிகமாகி கொண்டே சென்றது.
இடையில் மாரி மரணத்திற்கு பிறகு அவரது மகன் பிரேம்குமார் தலைமையில் மாஃபியா செயல்பட தொடங்கியது.
ஊரில் பிடித்த இடம் அபகரிப்பு, பிடித்த பெண்கள் கடத்தப்படுவது என அட்டகாசம் தொடர்கிறது.

பிரேம்குமார் தலைமையில் அவர்களுக்கான சாதி கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுகிறது.
திரைதுறையிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.
நடிப்பில் திலகம் என்றழைக்கப்படும் நடிகர் இவர்களுக்கு நெருங்கிய உறவு என்பதால் அவர் மூலமாக பல படங்களை வாங்கி வினியோகம் செய்கிறார்கள்.
இவர்கள் விருப்பட்ட நடிகைகள் இவர்கள் ஆசையை தீர்த்து வைத்தே ஆக வேண்டும்.
சிதம்பரத்தில் இயக்குநர் ஷங்கரால் படமாக்கப்பட்ட காதலன் பட ஹீரோயின் நக்மாவும் இதில் தப்பவில்லை😊

இப்படியான அடாவடிகள் மற்றும் அட்டகாசங்கள் நிறைந்த காலகட்டத்தில் முதன்முறையாக தென்னார்காடு மாவட்ட கதைகளத்தை மையமாக கொண்ட "ராசுபடையாட்சி என பெயரிடப்பட்டு மறுமலர்ச்சி" என பெயர் மாற்றப்பட்ட திரைப்படம் திரைக்கு வெளிவருகிறது 1998-ல்... 

மறுமலர்ச்சி திரைப்படத்தில் ராசு படையாட்சி கதாபாத்திரத்தை மையபடுத்தி திரைப்படத்தை எடுத்திருப்பார்கள்.
படத்தில் மற்ற சமுகத்திற்கு எதிரான வசனங்கள் அறவே இல்லை என்றாலும், ராசு படையாட்சி என்ற பாடல் மற்றும் கதாபாத்திரம் மஃபியா குருப் கண்களை உறுத்தியது.
சிதம்பரத்தில் மறுமலர்ச்சி திரைபடம் திரையிட தடை விதித்தார்கள்.
அவர்கள் கட்டுபாட்டில் இருந்த மூன்று தியேட்டர்கள் தவிர்த்து மீதம் இருந்த மூன்று தியேட்டர்களும் படத்தை வெளியிட அஞ்சினார்கள்.
அந்த சமயத்தில் நம்ம படத்துக்கு நம்ம ஏரியாவில் தடையா? என கொதித்தெழுந்தனர் சில படையாட்சிகள்.
அதில் ஒருவர் தான் கத்திரிமேடு பழனிவேல்.
இவர் மதிமுகவில் சிதம்பரம் நகரசெயலாளராக இருந்தார். வேறு கட்சியில் இருந்தாலும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்துடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

பிரேம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் எதிர்ப்பை மீறி சிதம்பரம் லேனா வடுகநாதன் தியேட்டரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படையாட்சிகளை பாதுகாப்புக்கு நிறுத்தி, மறுமலர்ச்சி திரைப்பட பெட்டியை யானை மீது கொண்டு வந்து வெற்றிகரமாக திரையிட்டார்.
திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓட, எதிர்தரப்பால் எதுவும் செய்ய முடியாமல் புகைந்து கொண்டிருந்தனர்.
பழனிவேல் படையாட்சிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது, அவர் எதற்கும் அஞ்சாமல் மேலும் கடுமையாக அவர்களை எதிர்க்க ஆரம்பித்தார்.
அதுவரை சிதம்பரம் நகராட்சி ஏலங்கள் அவர்களே எடுத்து வந்த நிலையில், புதிதாக அனைத்து ஏலத்திலும் பங்கு கொண்டு நகராட்சி ஏலங்களை கைப்பற்றினார் பழனிவேல் படையாட்சி.

இது எதிர் தரப்பில் பெரும் அசிங்கத்தையும், பயம் மக்களிடம் போய் விடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்த ரவுடிகளை வைத்து பழனிவேலை மிரட்டி பார்த்தார்கள்.
பழனிவேல் சிதம்பரத்தில் அட்ராசிட்டி செய்துக் கொண்டிருந்த சில படையாட்சி குழுக்களை ஒன்று சேர்த்தார்.
சின்ன மார்க்கெட், தோப்பு போன்ற பகுதிகளில் இருந்த படையாட்சி குழுக்களுடன் கை கோர்த்து எதிர் தரப்பை மிரட்டும் அளவிற்கு வளர்ந்தார்.
பகை மேலும் அதிகமாக, சிதம்பரம் பஸ்ஸ்டாண்ட் சைக்கிள் ஸ்டான்ட் ஏலத்தையும் அவர்களிடம் இருந்து பழனிவேல் கைப்பற்றினார்.

ஜூலை மாதத்தில் ஒருநாள் சிதம்பரம் நீதிமன்றம் அருகில் இருக்கும் ஷாஜகான் காம்ப்ளக்ஸில் தங்கி இருந்த பழனிவேல் படையாட்சி வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்.
சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகள் அனைத்திலும் பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகிறது, சாலைவழி போக்குவரத்து அடியோடு முடங்குகிறது.
காவல்துறை ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகிறார்கள், சிதம்பரம் முழுக்க இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்குகிறது.
படையாட்சிகள் அனைவரும் இதை விடவே கூடாது என்ற நிலையில் கோவத்தோடு சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்.
சிதம்பரத்தையே மிரட்டிய மாஃபியாக்கள் தலைமறைவு ஆகிறார்கள்.

பழனிவேல் படுகொலையை கண்டித்தும், மாஃபியாக்களை கைது செய்ய கோரியும் வன்னியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் அறிவிக்கப்படுகிறது.
போராட்ட நாளும் வந்தது.
1998-ல் மதிமுக பிரமுகர் பழனிவேல் படையாட்சி கொலைக்கு கண்டனம் தெரிவித்து சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,
இதில் பாமக நிறுவனர் மரு.ராமதாஸ்,
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி.குரு,
மதிமுக செஞ்சி ராமச்சதிரன்,
கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா உட்பட பல பேர் கலந்துக் கொண்டனர்.

சிதம்பத்தில் தன் பாதுகாப்பு மற்றும் தனது சொத்துக்கள் பாதுகாப்பிற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை தென் தமிழகத்தில் இருந்து மாஃபியா குழுவால் இறக்குமதி செய்யப்பட்டனர்.
சாமியானா பந்தல் போட்டு சாதாரண போராட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள சுற்று வட்டார படையாட்சிகள் மிக அதிக அளவில் குவிந்தனர்.
சிதம்பரத்தின் நான்கு வீதிகளிலும் மனித தலைகள்.
இவ்வளவு கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
அந்தளவுக்கு மக்களிடம் வெறுப்பை சேர்த்து வைத்திருந்தார்கள் மாஃபியா குழு.

கூட்டம் அமைதியாக போய் கொண்டிருந்த நிலையில் சிதம்பரம் ரயில்வே நிலையம் அருகில் ஒரு தலைவரின் கார் ரவுடி கும்பலால் அடித்து நொறுக்கப்படுகிறது.
காரில் வந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா. ஆனால் மரு.ராமதாஸ் கார் என நினைத்து ரவுடி கும்பல்கள் தவறாக தாக்கி விட்டார்கள்.
கார் தாக்கப்பட்ட செய்தி தீயாக பரவியது. மேடையில் மரு.ராமதாஸ் இருந்தும் கட்டுக்கடங்காத மிகப்பெரிய கூட்டம் என்பதால் மருத்துவரை தான் தாக்கி விட்டார்களோ என்ற கோவத்தில் கொந்தளித்தனர்.

சிதம்பரம் முழுக்க இருந்த "மருது ஒயின்ஸ்" (அப்போது டாஸ்மாக் கிடையாது) ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் ஷட்டரை உடைத்து அடித்து நொறுக்கப்பட்டன.
வடக்கு வீதியில் இருந்த மாஃபியா கூட்டத்தின் வக்கில் வீடு பயங்கரமாக சூரையாடப்பட்டது. வீட்டின் ஓடு வரை நொறுக்கப்பட்டு உருகுலைக்கப்பட்டது. (பல வருட வழக்கின் தீர்ப்பாக வக்கீலுக்கு அரசு சில லட்சங்களை சமிபத்தில் நஷ்ட ஈடாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது).

மாஃபியாக்களின் தியேட்டர் வணிக வளாகங்கள் கல்வீச்சி மற்றும் தீவைப்புகளால் அதிக சேதம் அடைந்தது.
மேலும் கோவம் அடங்காத கூட்டம் பாலமான் வாய்க்கால் பாலத்தை கடந்து அண்ணாமலை நகருக்குள் நுழைய முயல போலிஸ் தடுத்து நிறுத்தியது.
இரண்டாயிரம் தென்தமிழக ரவுடிகளும் ஓடி பதுங்கி விட்டனர்.

இது போன்ற சம்பவம் நடக்கும் என அவர்களே நினைக்கவில்லை.
கூட்டமும் இவ்வளவு வருமென ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும் நினைக்கவில்லை.
சுற்று வட்டார படையாட்சி ஊர்கள் பலவற்றிலும் சாலை போக்குவரத்து முடங்கியது.
பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. (பேருந்து தாக்குதல் வழக்கு இன்றும் நடப்பதாக கேள்வி) பிறகு தாக்கப்பட்டது மருத்துவர் அல்ல என தெரிந்து தான் சுற்று வட்டாரம் அமைதியானது.

இந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் காரணமாக மாஃபியாக்களின் பல வருட சாம்ராஜ்யம் அடியோடு ஒடுக்கப்பட்டது.
மாஃபியாக்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து சில மாதங்களுக்கு பிறகு கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
நீதிமன்றம் ஜாமின் வழங்கி தஞ்சை மாவட்டத்தை தான்டி வெளியில் போக கூடாதெனவும் தடை போட்டது.

பிறகு சில வருடங்கள் கழித்து பிரேம் சிதம்பரம் வரும் வழியில் சீர்காழியில் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். (ஏனென்று காரணம் தெரியவில்லை😊😷😉)

பிறகு ஸ்ரீதர் தலைமையேற்கிறார் அவரது கட்சிக்கு,
சிதம்பரம் வரை நீடித்த அவர்கள் அராஜகம் அடியோடு அஸ்தமனம் ஆகி அமைதி வாழ்க்கையானது. தொடர்ந்து சில குழுக்கள் மாஃபியா ஆள் எனக்கூறி ஏதோ தவறுகள் செய்ய காவல்நிலையத்தில் ஆஜர் ஆகி எனக்கும் எந்த குழுவிற்கும் சம்பந்தமில்லை என கடிதம் எழுதி கொடுத்த வரலாறும் உண்டு.

இந்த போராட்டத்தில் பல உள்ளூர் தலைவர்களும் நிறைய பங்கெடுத்து கொண்டார்கள், அவர்கள் பெயரை தனிதனியாக சொல்வதை தவிர்த்து விட்டேன்.
இந்த அரை நாளைய எழுச்சி அரை நூற்றாண்டு அடாவடிகளை அடித்து அடியோடு நொறுக்கியது.
காரணம் பல பறையர், இதர சமுகம் மற்றும் மீனவர் மீது கைவைத்தவர்கள் கொஞ்சம் எல்லைமீறி ஒரு படையாட்சி மீது கைவைத்தது தான் இதற்கான விளைவை ஏற்படுத்தியது.

சிதம்பரத்தில் நடந்த கலவரத்திற்கு பிறகு மாஃபியாக்களின் கொட்டம் அடியோடு அடங்கியது மட்டுமில்லாமல் அமைதியான நிலைக்கும் சென்றது.

அதன் பிறகு நான் மாஃபியா குருப் என எவன் கூறினாலும், போடா நான் சந்திரன் குருப் எனக் கூறி அசால்ட்டாக தெரிக்கவிட்ட சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.
அந்தளவுக்கு சிதம்பரத்தில் மண்ரோடு சந்திரனின் வளர்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர் தனது சகாக்களுடன் தென் மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு கவரப்பட்ட்டில் இருந்து ஆரவாரமாக போவது வழக்கம் அதுபோன்ற நாட்களில் கவரப்பட்டுக்கு பக்கத்து கிராமமான சிவபுரி மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தபட்டது.
சிவபுரி வன்னியர்கள் நிறைந்த மோசமான கிராமம்.
அண்ணாமலை நகரையே ஒரு முறை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
ஸ்ரீதரை எச்சரித்து அனுப்பியது மட்டுமில்லாமல் கவரப்பட்டில் இருந்து வந்து திரும்பும் முக்கூட்டு பாதையில் பிரம்மாண்டமாக இரண்டு சிங்கங்களோடு கூடிய வன்னிய சங்க கொடிகம்பத்தை நிறுவினர்.
ஊருக்கு போகும் போதும் வெளியே வரும் போதும் இது வன்னியபூமி என்பதை உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்பட்டது அது.
இன்றும் சிவபுரி என்றால் அவர்களுக்கு மரணபீதியை ஏற்படுத்தும்.
அதுபோக வல்லம்படுகை, வடக்குமாங்குடி உட்பட பல கிராமங்களும் அவர்களை அசால்ட்டா மிரட்டும் கிராமங்கள்...

சிதம்பரத்தில் மாரியப்பா தியேட்டரில் போயே சவுண்டு விட்டுட்டு வரலாம் இப்போது நிலைமை அப்படி தலைகீழானது.
பழனிவேல் படையாட்சிக்கு சப்போர்ட்டாக இருந்த தாதாக்களில் சின்னகடைத்தெருவை சேர்ந்த படையாட்சிக்கு அந்த தெருவில் சிலையே வைத்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

சிதம்பரத்தில் மாஃபியா அரஜகங்களை ஒழித்ததில் வன்னியர் சங்கம், மறுமலர்ச்சி திரைப்படம், பழனிவேல் படையாட்சி, சில கிராமங்கள், வன்னிய உணர்வாளர்கள் என பலருக்கும் பங்கிருக்கிறது.
நிறைய பேரது தியாகம் மற்றும் வீரத்தை இந்த தருணத்தில் நினைத்து பெருமை படுவோம்...!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்!!!
இதற்கு சிதம்பரம் ஒரு எடுத்துகாட்டு.

....................................................

#மன்ரோடு_சந்திரன் பற்றிய செய்தி...

மன்ரோடு பா.சந்திரன் படையாட்சி

சிதம்பரம் மன்ரோடு எனும் பகுதியில் பிறந்தவர் சந்திரன், இவர் தனது தாய் கிராமமான வல்லம்படுகை கிராமத்தோடு தொடர்பில் இருந்தார்,

சரியான உடற்கட்டோடு மாடல் ஹீரோ போல இருப்பார், சிரித்த முகம், எல்லோரிடமும் கடைசிவரை அன்பாக பழகியவர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

2000-ம் வருடத்திற்கும் முன் காலகட்டத்தில் வல்லம்படுகையில் சொந்த சாதிக்காரர்களுடனான மோதலில் ஒரு சம்பவம் ஆகிறது. அதில் சந்திரன் அவர்களும் கைதாகி சிறை செல்கிறார்.

மேலும் எதிர் எதிர் தரப்பாக பழிவாங்க காத்துக் கிடக்கிறது எதிர்தரப்பு.

நடுவில் இரண்டு மூன்று சம்பவங்கள் ஆகின்றன.
பிறகு சமாதானம் ஏற்பட்டு இனி இரு தரப்பும் மோதிக் கொள்ளக்கூடாதென பஞ்சாயத்து செய்யப்படுகிறது.

சந்திரன் தனது நன்பர்களோடு வேறொரு கலத்தில் பயணிக்க தொடங்குகிறார், தனது ஆளுமைக்கான பரப்பை விரிவுப்படுத்துகிறார் சந்திரன்.
சிதம்பரத்திற்கு தெற்கே திருநெல்வேலி வரை தனது எல்லையை விரிவுப்படுத்துகிறார்.

மனல்மேடு சங்கரோடு மோதல் முற்றுகிறது. ஒரு கட்டத்தில் மனல்மேடு சங்கர் பயந்து பதுங்குகிறார் இடையில் மணல்மேடு சங்கர் என்கவுண்டரில் கொல்லபடுகிறார்.

அண்ணாச்சி சந்திரனை கண்டு தமிழகத்தில் இருக்கும் பெரும்புள்ளிகளும் அஞ்சி அமைதிகாக்கின்றனர்.
திமுக ஆட்சி சமயம் அமைச்சர்கள் அண்ணாச்சிக்கு பயந்து அரசிற்கு கோரிக்கை வைக்கிறார்கள், அண்ணாச்சிக்கு என்கவுண்டர் உத்தரவு போடப்படுகிறது.

சில காலம் சிறைக்கு செல்கிறார். பிறகு சிலரது அறிவுறுத்தலின்படி அரசை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் பாதுகாப்பிற்காக "வன்னியர் சங்கத்தில்" இணைய விரும்பி காடுவெட்டியாரை அவரது வீட்டிற்கு ஐநூறு கார்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து இணைகிறார்.

வன்னியர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கப்படுகிறது.

அப்போதைய கடலூர் மாவட்ட திமுக அமைச்சரால் கட்சியை நடத்தவே முடியவில்லை என மேலும் புகார் முதல்வருக்கு பறக்கிறது.

சிதம்பரம் தனது கட்டுப்பாடு என பீத்திக் கொண்டிருந்த தெற்கை பூர்வீகமாக கொண்ட  ஒரு அரசியல் தலைவர் அலப்பரை செய்து ஒரு சிறு கிராமத்தை பகைத்துக் கொள்கிறார். பிறகு அண்ணாச்சியின் கடும் எச்சரிக்கைக்கு பயந்து சிதம்பரத்தை தவிர்த்து தெற்கேவே தங்குகிறார்.
பிறகு சில கூட்டாளிகள் உதவியோடு அண்ணாச்சியை சமாதானப்படுத்துகிறார், சிதம்பரத்தில் வந்து போக பாதுகாப்பையும் அண்ணாச்சியே உறுதிப்படுத்துகிறார். ஆட்டம் அடங்கி சப்பையாகிவிட்டார் அந்த அரசியல் புள்ளி.

சிதம்பரம் பகுதி இளைஞர்கள், பல்கலைகழகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் என அண்ணாச்சி படைபலம் பெறுகியது.
பல ஏரியா தாதாக்கள் குழுவிலும் அண்ணாச்சியின் ஆதரவாளர்கள் ஊடுருவுகிறார்கள்.
எவன் எது செய்ய திட்டம் போட்டாலும் அண்ணாச்சிக்கு அப்டேட் ஆகிறது.

தமிழகத்தின் நிழல் உலகத்தை அண்ணாச்சி கட்டி ஆள தொடங்கினார்.

இவரை டார்கெட் செய்து இவர் மீதான வன்மத்தில் சண்டக்கோழி படம் எடுக்கப்பட்டு காசி கேரட்டராக அண்ணாச்சி சித்தரிக்கப்பட்டதாகவும் தகவல்.

திருமணம் முடிந்து சில காலங்கள் கடந்த பிறகு தனது குழந்தையை பார்க்க பெங்களூருவில் இருந்து வரும் போது நெடுஞ்சாலையில் விபத்தில் (அவ்வாறு சொல்லப்பட்டது) மரணம் அடைகிறார்.

2011 ஜன-30 சிதம்பரம் கண்ணீரில் மூழ்குகிறது, பள்ளி கல்லூரி வரை பாதியிலேயே விடுமுறை விடப்படுகிறது.
போக்குவரத்து அறவே முடங்குகிறது.

காடுவெட்டியார் இறுதி மரியாதை செய்து மண்ணுலகில் இருந்து விண்ணுலகை ஆள விடைக்கொடுத்து வழி அனுப்புகிறார்.

இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பெரும் நிழலுலக அதிபதிகளும் கூடியதால் சிதம்பரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.

மண்ரோடு சந்திரன் படையாட்சியின் சகாப்தம் முடிவு பெறுகிறது.

அதன் பிறகு அவரது தம்பி ஹரியின் செயல்பாடு பிறகு அவரின் தற்கொலை, கடைசியில் தலைதூக்கிய தருதலைகளின் இருதலைகள் பந்தாடப்பட்டது. சிதம்பரத்தில் எப்போதுமே சிங்கங்களின் ஆட்சி தான் என நிலைநிறுத்தப்பட்டது வரை வேறு லெவல் இரத்தசரித்திரம்!

Gangsters கதையெல்லாம் வெளிப்படையாக எப்போதுமே சொல்லப்படாது. குதிர் அளவுக்கு புதிர் நிரம்பியவை.

சிதம்பரத்தின் சிவப்பு பக்கங்கள் மூடி வைக்கப்படுகிறது.
                   ***The End***

நன்றி.!
ஆணந் வாண்டையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...