வெள்ளி, 6 அக்டோபர், 2017

சாதிப்பெருமை பேசுவேன்.! அடுத்த சாதியை இகழாமல்...

"சமூக வலைதளம் "

இங்கு எத்தனை பேர் அடுத்த சாதியை இகழாமல் தன் சாதிப்பெருமையை மட்டும் பேசுகிறீர்.??

சாதிப்பெருமையை சமூக வலைதளத்தில் பேசி என்ன பயன்.??

உன்மையில் உங்களுக்கு சாதிப்பற்றோ , உணர்வோ , ஏன் வெறியாக கூட இருந்தால் இன்னும் கூலி விவசாய குடிகளாக வாழும் நம் இன மக்களை வாழ வையுங்கள்.!

உங்களை யாசகம் இட சொல்லவில்லை.

அவர்களை யாசகம் கேட்கும் அளவிற்கு செல்லாமல் ,பாதுகாத்து ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து கொடுத்தால் அவன் அரசகுடி வழி வந்தவன் என கருதலாம்.

அதை விடுத்து ,

'சத்ரியன் , ஆண்டப்பரம்பரை , ன்னு சொன்னா எவனும் ஒருபடி அரிசி கொடுக்க மாட்டான்..உழைப்பு தான் நம்மிடம் உள்ளது.. அதனை ஒழுங்கான நேர்க்கோட்டில் ஒரு நூல் பிடித்து வழிகாட்ட முயற்சி செய்யுங்கள்.

சும்மா எதுக்கெடுத்தாலும் 'சத்ரியன் , வீரப்பரம்பரை ன்னு சமுக வலைதளங்களில் பேசுவதால் ஒரு பயனும் இல்லை.. முன்னோர் வரலாறு முக்கியம் தான்..இல்லைன்னு மறுப்பதற்கில்லை.

இருக்குற வரலாற மதிச்சி நடந்துக்கோ..வரலாற நீ உருவாக்கு..

இங்க பேஸ்புக்குல வெறும் கையில ஏண்டா மொழம் போடுறிங்க.??

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...