சனி, 24 ஜூன், 2017

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::--

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::---
===================
பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.!

இன்று கடலூர் தெற்கு மாவட்டத்தை பற்றி காண்போம்..!

கடலூர் தெற்கு மாவட்டத்தில் பாமக வின் பலமே இளைஞர்கள் தான்.,எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநாடாக நடத்தி காட்டும் திறமை உள்ளவர்கள்..

மாவட்டத்தில் நிகழும் பொது பிரச்சனைகளில் தலையிட்டு அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் நமது பொருப்பாளர்கள்., சீரிய வழிகாட்டியாக ஐயா  பு தா அருள்மொழி அவர்கள்,

கிராமம் கிராமமாக சென்று களப்பனி ஆற்றும் அண்ணன் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ் மாவட்டச்செயலாளர் கடலூர் தெற்கு அவர்களின் களப்பனி உன்மையில் மிகுந்த பாராட்டுக்குரியது.

நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள கிளை பொருப்பாளர்களையும் இளைஞர்களையும் சந்தித்து களப்பனி ஆற்றுவது கட்சியின் வளர்ச்சிக்கான முன்னேற்றமே.!

சமூக பிரச்சனையிலும் பொது பிரச்சனையிலும் தலையிட்டு அதற்கான தீர்வை உடனடியாக கண்டறிந்து மக்களுக்காக பனியாற்றுபவர்கள் அண்ணன் மாநில து.பொ.செ முனைவர் அசோக்குமார்
மற்றும் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ்.

தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான சிதம்பரம்.,காட்டுமண்ணார்கோவில்., புவனகிரி ( தற்பொழுது மேற்கு மாவட்டம்)
இந்த தொகுதிகளில் பாமக வாங்கிய வாக்குகள் கணிசமானவை.

அதாவது திராவிட பண முதலைகளை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளுக்கு மேல் பெற்றது நமது பொருப்பாளர்களின் சீரிய களப்பனியால் தான் எனபதனை மறுக்க முடியாது.!

மாவட்டசெயலாலர் செல்வமகேஷ் அவர்களின் களப்பனி அளப்பறியது..அதாவது 2010-ஆண்டு முதல் மாவட்ட வன்னியர் சங்க செயலாலராக இருந்து , 2013- ஆண்டு மரு.அய்யா வை கைது செய்யப்பட்ட போது குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் பொய்வழக்கில் கட்சிக்காக ஆறுமாத காலம் சிறைதண்டனை அனுபவித்தவர்.

2015-ஆண்டு முதல் பாமக மாவட்ட செயலாலராக பனியாற்றி வருகிறார்.
பகுதி இளைஞர்களின் பல பிரச்சனைகளில் முன்னிற்ப்பவர்.

மாவட்டத்தில் குழு அரசியல் ஆங்காங்கே தென்படுகிறது..இருந்தாலுமே அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்களாக ஒன்றினைந்து பனியாற்றுவது பெருமைக்குரியது..

கிராமங்கள் தோறும் சென்று களப்பனி ஆற்றும் மாவட்டசெயலாலரின் பனியே கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.!

ஆயிரமாயிரம் சொந்த கருத்துவேறுபாடு இருந்தாலும் கட்சி பனியில் ஒன்றினைந்து வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம்..!

-- தொடரும்..

வியாழன், 8 ஜூன், 2017

கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-

கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-
=================
ஆகச்சிறந்த பல களப்போராளிகளை தந்த கடலூர் மாவட்டத்தில் பலரும் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்கள் உள்ளனர்.!

வடக்கு மாவட்டத்தை பொருத்த வரையில் இரண்டு உன்மை களப்போராளிகளாக வலம் வருபவர்கள் ,

சமூக ஆர்வலர் , பொதுநல தொண்டர் , பாமக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாலர்., வடக்குத்து ஊராட்சிமன்ற தலைவர் அண்ணன் வடக்குத்து கோ.ஜெகன் (Vadakkuthu Jagan) அவர்கள்.

மற்றும் உன்மை தொண்டர் பாமக களப்போராளி ., வடக்கு மாவட்ட செயலாலர் அண்ணன் சமட்டிகுப்பம் இரா.ஆறுமுகம் அவர்கள் ..!

கட்சி கடந்து சமுதாயம் கடந்து பல தரப்பினரிடமும் நற்பெயரோடு விளங்குபவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்..!

ஊராட்சி மன்ற தலைவராக இருந்து கொண்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளவுக்கு தன் ஊராட்சியில் நலத்திட்டங்களை செய்துள்ளார்.!

தொண்டர் படை இளைஞர் கூட்டத்தை தன்னுடன் வைத்திருப்பவர் அண்ணன் ஆறுமுகம் அவர்கள்..! அதுவே அவரது பலமும் கூட..!

இவர்களுக்கு உறுதுனையாக மாநில து.பொ.செயலாலர் அண்ணன் பழ. தாமரைக்கண்ணன் அவர்கள்.!

பொருப்பாளர்கள் மீது பலருக்கும் பல அதிருப்திக்கள் இருக்கத்தான் செய்யும்.! இதையெல்லாம் கடந்து கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்பவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்.!

பலர் ஆயிரமாயிரம் குறைகளை கூறுவார்கள்..இதையெல்லாம் நம்மால் முடிந்த வரை நாமே தீர்த்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

கடலூர் வடக்கு மாவட்டத்தில் நான் கண்ட பகுதிகளில் பாமக  பலம் வாய்ந்து தான் காணப்படுகிறது.!

குறிப்பாக நெய்வேலி தொகுதியில்   பாமக பலம் தான்..! அதிகப்படியான இளைஞர்களை உள்ளடக்கிய தொகுதி நெய்வேலி தான்.
அதுவே பாமக வின் மாபெரும் பலமாகும்.!

இதே வளர்ச்சி பாதையில் ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்று கட்சியை மேலும் பலபடுத்தும் பட்சத்தில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் பாமக ஒரு மாபெரும் சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.!

====
---------- தொடரும்......

ஞாயிறு, 4 ஜூன், 2017

கலங்க வேண்டாம்... கழகங்களுடன் கூட்டணி இல்லை! -- மருத்துவர் அய்யா

மருத்துவர் அய்யா அவர்களின் .,
               ----முகநூல் பதிவு-----

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், எனது நண்பருமான கலைஞரின் 94-ஆவது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைரவிழாவையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று முன்நாள்  அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.

எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கலைஞருக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்... அக்கட்சியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்பாக எச்சரிக்கை  விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு விளக்கமளிப்பதற்காகத் தான் இந்த முகநூல் பதிவு ஆகும்.

தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல்ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாக பழகுவதும் வாடிக்கையாகும். அத்தகைய நாகரிக கலாச்சாரத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். ஆனால், எதிர் அணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம் ஆகும்.

திமுகவின் முன்னாள் பொருளாளரும், எனது இனிய நண்பருமான ஆற்காடு வீராசாமி சில வாரங்களுக்கு முன் முத்துவிழா கொண்டாடினார். திமுக தலைமையகமான அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அவ்விழாவில் நான் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வீராசாமியின் புதல்வரும், மருத்துவருமான வீ. கலாநிதி குடும்பத்துடன் என்னை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையேற்று அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மனம் நிறைய விரும்பினேன். ஆனால், திமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் அக்கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டால் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதற்காகவே பங்கேற்பதைத் தவிர்த்தேன். அவ்விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் நண்பர் ஆற்காடு வீராசாமி  அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்றாம் தேதி காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லம் சென்றேன். அவரும், குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து ஆற்காடு வீராசாமியுடன்  உரையாடிக் கொண்டிருக்கும் போது‘‘ உங்களுடனான இன்றைய சந்திப்பைக்கூட ஊடகங்கள் வேறு விதமாகத் தான் வர்ணிக்கும். காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை  திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன்.

கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு ஆகும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஆனாலும், அரசியலைக் கடந்தது நமது நட்பு என்பதால் தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்’’  என்று கூறினேன். அதை நண்பர் ஆற்காடு வீராசாமி அவர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது ஆற்காட்டாரின் புதல்வர் வீ.கலாநிதி, பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர், செய்தித்தொடர்பாளர் பாலு, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வி.ஜே.பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அரசியல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.

இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட நான் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள். அதிமுக, திமுக அல்லாத அரசை  தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக மிக உறுதியாக உள்ளது.
                            *******************

--- மருத்துவர் இராமதாசு அய்யா.

வியாழன், 1 ஜூன், 2017

பாமக வில் இஸ்லாமியர் பழனிபாபா

இஸ்லாமியர் "பழனிபாபா" பாமக  :---

அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாக கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் அய்யா ,

சிறுபான்மை இனத்தவர் இஸ்லாமிய சகோதரர் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பை பெற்றார்..!

மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது.!

வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான்.!

வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெற காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.!

பாட்டாளி மக்கள் கட்சி க்கு இஸ்லாமிய சகோதர்கள் இன்றளவும் பலர் பெரும் உழைப்பை செலுத்தி வருகின்றனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உன்மை.!

    மிக்க நன்றி .! என் சகோதரர்களே.! நன்றி.!

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...