சனி, 23 டிசம்பர், 2017

வன்னியர் குல தெய்வம் 'பச்சைவாழியம்மன்'

வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'.

எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்மன்.

பால்வாத்துண்ணான் கிராமம்;

கடலூர் மாவட்டம் ,சிதம்பரத்திற்கு வடக்கே சுமார் 16 -கீ.மீ , கடலூருக்கு தெற்கே சுமார் 25 - கி.மீ தொலைவிலும் வங்க கடலில் இருந்து மேற்கே சுமார் 7 .கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா வின் கடைசி குக்கிராமம். வீராணம் ஏரியின் பாசனம் பெரும் கடைசி ஊர்.

நெல் விளையும் 'நன்செய்' நிலங்களும் ,மானாவரி முந்திரியும் , செயற்கை நீர் பாசன வசதி உடையவர்கள் மல்லாட்டை, மற்றும் சில பனப்பயிர்களும்  பயிரிடுகின்றனர்.மிகவும் செழிப்பான ஊரும் அல்ல..மிகவும் வறட்சியான ஊரும் இல்லை..நடுத்தர வளமுடைய ஊர்.

ஊரில் பெரும்பான்மையாக வன்னியர்களும் , அவர்களுக்கு அடுத்தப்படியாக பறையர் சமுகத்தவரும் வசித்துவருகின்றனர்.
குறைவான எண்ணிக்கையில் (4,5 குடும்பங்கள்) விஸ்வகர்மா எனப்படும் கருமார் சமுகத்தவர் வசித்துவருகிறார்கள்.

இவர்கள் யாவருமே நடுத்தர வர்க்கத்தினர் தான்.

வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம். கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக 'வடலூர் நெய்வேலி அருகே உள்ள 'ஆபத்தாணபுரம்' ஊரில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் பலருக்கு குல தெய்வ கோவிலாகும்.

சரி அதுபோகட்டும். பால்வாத்துண்ணன் கிராமத்து படையாட்சிகளின் பச்சைவாழியம்மன் , மற்றும் வாழ்முனி" பற்றி கான்போம்.

"கோவில் தர்மம்" வன்னியர்களின் வழிவழியான வழக்கம்.

பச்சையம்மன் எனப்படும் பச்சைவாழியம்மன் வன்னியர்களின் குலதெய்வம். வளத்தின் செழிப்பின் அடையாளம் பச்சையம்மன். பச்சையம்மனின் காவல் தெய்வம் "வாழ்முனி.

கிராமத்தின் எல்லையில் பல்வேறு மூலிகை தாவரங்கள் சூழ சுமார் 16-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் கோபுரத்திற்குள் குடிகொண்டிருப்பவர் அன்னை பச்சைவாழியம்மன். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிகளுள் ஒருவராக ,பச்சையம்மனின் காவலாக பார்ப்பதற்கு மிக கம்பீரமாக வீற்றிருப்பவர் "வாழ்முனி' தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

பச்சைவாழியம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.. வலதுபுறம் வினாயகரும் ,இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலில் பெரிய அள்வில் ஒரு சிவ லிங்கம் உள்ளது. கோவிலில் லிங்கம் இடம் பெற்றதற்கான காரணம் பச்சையம்மன் புராண வரலாற்றினை படித்தால் விளங்கும்.(சற்று பெரிது)

கோவில் சுமார் அரை ஆயிரம் காலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே கோவில் காட்டில் சற்று ஒரு நூறு மீட்டர் தொலைவில் சபதரிஷிகளான 'முனிஸ்வரர்'கள் காவலாக அமர்ந்திருக்கின்றனர்.

ஒரு சில ஊர் பிரச்சனைகளால் பரமரிப்பின்றி சில வருடங்கள் அப்படியே பாழடைந்த நிலையில் இருந்தது.இவை அனைத்தும் சென்ற வருடம் தான் புதுப்பிக்கப்பட்டது. கோவில் மற்றும் காடு உட்பட அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. கோவில் அறங்கவலாராக ஊரின் வன்னியர் சமுகத்தை சார்ந்தவரே இருக்கிறார்.

கோவில் பூசாரியாக காலங்காலமாக விஸ்வகர்மா சமுகத்தை சார்ந்தவரே , பூஜை செய்துவருகின்றனர்.

திருவிழா என்று பார்த்தால் எனக்கு விவரம் தெரியவருவதற்கு முன்பு பிரம்மாண்டமாக ஏழு சாமிகள் அதாவது பச்சையம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் அன்னவாகனத்திலும், வினாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், 
முருகப்பெருமான் மயில்வாகனத்திலும்,
வாழ்முனி குதிரை மீதும் ஊர்வலம் வந்து சிறப்பாக திருவிழா நடைபெரும் என பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து ஊரில் பங்குனி உத்திரம் , ஆடி மாதம் சாமி ஊர்வலம் , மாசி மகம் போன்றவை.
இதில் பங்குனி உத்திரமே சற்று விமர்சியாக நடைபெறுகிறது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே.! கூடியவரை குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

முன்னோர் முதுமொழி..முடிந்தவரை பின்பற்றுவோம்.

  -- தொடரும்.

புதன், 20 டிசம்பர், 2017

வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".

கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம்,
பண்ருட்டியிலிருந்து 8.கி.மீ, காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 4-கி.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.

தாழம்பட்டு கிராமம்:

அழகான பசுமையான ஊர்.
முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.

'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.

அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.

கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.

ஆலமரத்தடியில் இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.

ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.

கோவில் விசேஷம் "முப்பூசை'

ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.

என்னதான் நாகரீக வேளாண்மை வளர்ச்சி ஆனாலும் அன்று காடு திருத்தி கழனியாக்கி காவல் செய்த முன்னோர் பன்றியையும் வேட்டையாடித்தான் நம்மைக் காத்தனர்.  அதனால்தான் பன்றிப் பலி பொருளாகவும் ஆனது.. அந்தந்தப் பகுதிகளில்கிடைக்கும் வளங்களைக் கொண்டு முன்னோர்க்குப் படைப்பது வழக்கம்.

இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.
காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.

மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.

சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.

சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.

ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.

மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.

முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.

சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.

நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.

நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்.
மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.

அருள்மிகு ஸ்ரீ 'பெரம்மனார் துனை'

  -- இரா.இராஜேஷ்.B.Sc.

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

'தென்னாற்காட்டு பள்ளிகள்'

வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".

கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம் காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 6-கீ.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.

தாழம்பட்டு கிராமம்:;
அழகான பசுமையான ஊர்..முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.

'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.

அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.

கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.

இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.

ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.

கோவில் விசேஷம் "முப்பூசை'

ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.

இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.

மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.

சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.

சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.

ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.

மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.

முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.

சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.

நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.

நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்..மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.

'பெரம்மனார் துனை'

  -- இரா.இராஜேஷ்.B.Sc.

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...