செவ்வாய், 10 ஜனவரி, 2017

விவசாயத்திற்கு போராடும் மருத்துவர்

Check out @RRRAJESH2's Tweet: https://twitter.com/RRRAJESH2/status/818777390516240384?s=09

தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி.!மருத்துவர் அய்யா காட்டம்


தமிழகத்தில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி என்று
ருத்துர் அய்யா கூறியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.!

கும்பகோணம்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது என்று காட்டமாக பேசினார்.

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீரும் கிடைக்காமல், பருவ மழையால் கிடைக்கும் நீரும் கிடைக்காமல் வறட்சியின் பிடியில் தமிழகம் வாடி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

எலிக்கறி தின்னும் நிலைக்குத்தான் விவசாயிகளை தமிழக அரசு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி. இங்கு மக்களும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை, அமைச்சர்களும் சரியில்லை, விவசாய சங்கங்களும் சரியில்லை. விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை, இனி கிடைக்கப் போவதும் கிடையாது.

மக்கள் பட்டினி கிடந்து சாகிறார்கள். கிட்டத்தட்ட 190 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். காய்ந்த வயலைப் பார்த்து எந்த விவசாயி உயிரோடு இருக்க முடியும். கண்டிப்பாக அவருக்கு மாரடைப்பு வரத்தாய் செய்யும்.

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட வேண்டும். தஞ்சையில் விவசாயிகள் போராடி இருந்தால் ஒரு அமைச்சர் கூட உள்ளே நுழைந்திருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

மின்னனு பரிமாற்றத்திற்கான கட்டனத்தை நீக்க வேண்டும்.!! மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை.

டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முரண்பாடுகளின் மொத்த உருவத்திற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசின் அறிவிப்புகளையும், செயல்பாடுகளையும் தான் கூற வேண்டும். ஒருபுறம் மக்கள் பணப் பரிமாற்றத்திலிருந்து மின்னணு பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என்று கூறி வரும் மத்திய அரசு, மற்றொரு புறம் அதை வெறுக்கும் வகையிலான செயல்களை செய்து வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என கடந்த நவம்பர் 8&ஆம் தேதி அறிவித்த பிரதமர் நரேந்திரமோடி, அவற்றுக்குப் பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக அறிவித்தார். புதிய ரூபாய் தாள்கள் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டதால், வங்கிகளில் இருந்தும், தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் இருந்தும் பணம் எடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளில் வாரத்திற்கு ரூ.24 ஆயிரமும், தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் (ஏ.டி.எம்) ஒரு நாளைக்கு 2500 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், பெரும்பாலான வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்கள் பணம் இல்லாததால் செயல்படவில்லை. இதனால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், எந்த வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் நடுவத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்க வசதியாக, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுப்பதற்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. திசம்பர் 31 &ஆம் தேதிக்குள் பணத் தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்பதால், அன்று வரை இந்த சலுகை நீடிக்கும் என்றும் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்தன.

திசம்பர் மாதம் முடிவடைந்து ஜனவரி 8&ஆம் தேதியும் பிறந்து விட்டது. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவித்து 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு இன்னும் உயர்த்தப்படவில்லை. தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 2500 ரூபாயிலிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டாலும் ரூ.500 தாள் தட்டுப்பாடு காரணமாக ரூ.4000, அதுவும் திறந்திருக்கும் குறிப்பிட்ட சில நடுவங்களில் மட்டுமே எடுக்க முடிகிறது. மற்ற தானியங்கி பணம் வழங்கும் நடுவங்கள் 61 நாட்களாக பூட்டியே கிடக்கின்றன. இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றாக தெரியும்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுக்க வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை ரிசர்வ் வங்கி இரத்து செய்து விட்டது. அதனால், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் தானியங்கி மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு கூடுதலாகவும், மற்ற வங்கிகளில் 3 முறைக்கு அதிகமாகவும் பணம் எடுத்தால், அவ்வாறு பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் இக்கூடுதல் கட்டண முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக பற்று அட்டைகளின்(Debit Card) தன்மையைப் பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை ஒரே தடவையில் எடுக்க முடியும். மற்ற வங்கிகளின் தானியங்கி நடுவங்களில் ஒரு முறைக்கு ரூ.10,000 வீதம் 3 முறை பணம் எடுக்க முடியும். அதாவது, ஒரு பற்று அட்டை மூலம் மாதத்திற்கு ரூ.1.55 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் இருந்து பணம் எடுக்க முடியும். ஆனால், இப்போது ஒரு முறைக்கு ரூ.4000 வீதம் மாதத்திற்கு ரூ.32,000 மட்டுமே எடுக்க முடியும். சில வங்கிகளின் தானியங்கி நடுவங்கள் இரு மாதங்களாக செயல்படாததால் பிற வங்கிகளின் தானியங்கி நடுவங்களில் 3 முறைகளில் ரூ12,000 மட்டுமே கட்டணமின்றி எடுக்க முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் உச்சவரம்புப்படி தானியங்கி நடுவங்களில் அனுமதிக்கப்பட்ட முறைகளில் எடுக்கப்படும் பணம் போதுமானதாக இருக்காது. இதற்குக் காரணம் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் தானே தவிர, வாடிக்கையாளர்களின் தவறு அல்ல. அத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் தவறுக்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகை நியாயம்? என்பது தெரியவில்லை. இதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தான் பொறுப்பேற்க வேண்டும்; பற்று அட்டைகளின் கூடுதல் பயன்பாட்டுக்கான கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்.

மற்றொருபுறம் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். இதை சாத்தியமாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அப்படியே இருந்தாலும் அதற்கு மாறுவதற்கு வலிமையான காரணங்கள் தேவை. பணப் பரிமாற்றத்தை விட பணமில்லா பரிமாற்றம் இலாபமானது என மக்கள் நினைத்தால் அதற்கு மாறுவார்கள். எனவே, இருக்கும் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப பணமில்லா பரிமாற்றம் நடக்க வசதியாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்படும் பணத்திற்கு 1% முதல் 2% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தால், அது பலரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்து வரும். ஆனால், அத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு சில சலுகைகள் அறிவித்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. உதாரணமாக எரிவாயு உருளைகளுக்கான பணத்தை ஆன் & லைனில் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த தொகையை ஆன் & லைனில் செலுத்த ரூ.8 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆடு விற்றதில் கிடைத்த லாபம் மாடு விற்றதில் போன கதையாக, ஆன்லைனில் செலுத்தியதற்காக கிடைத்த ரூ.5 லாபத்தை விட ரூ.3 அதிகமாக ஆன்&லைன் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், இத்திட்டத்தில் யார் சேருவார்கள்? கடவுச்சீட்டுக்கு ரூ.1000 செலுத்த கட்டணமாக 16 ரூபாயும், ரூ.10000 மின்கட்டணம் செலுத்துவதற்கு ரூ.200ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பற்று அட்டை மூலம் செலுத்தும் பணத்திற்கு ஒரு விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். ஆனால், இப்போது அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரே செலுத்த வேண்டும் என்று வணிக நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. பணமில்லா பரிவர்த்தனை செய்வதில் இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு மின்னணு பரிமாற்றத்திற்கு மாற எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே, பரிமாற்றக் கட்டணங்களை ரத்து செய்து, ஊக்கப்பரிசுகளை வழங்குவதன் மூலம் தான் மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்க முடியும் என்பதால், அதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாழன், 5 ஜனவரி, 2017

சத்ரியன் என்பவன் யார்.??

சத்ரியன் என்பவர் யார்.??
__________________________
           அரசாட்சி காலத்தில் ஆயுதம் ஏந்த அணுமதி பெற்றவனே ஷத்ரியன்

             நாட்டையும் நாட்டு மக்களை யும் பாதுகாக்க என்நிலையிலும் போர் புரிய தயங்காதவன்

            இந்த இனத்திலிருந்தே அரசர்கள் தோன்ற முடியும்

             அந்த அடிப்படை யில் நாடு முழுவதும் பல்வேறு சமூகத்தினர் அக்காலத்தில்
சத்ரியர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்

             இது இரண்டு வகைப்படுகிறது

1.ஒருசில சமூகங்கள் ஒட்டுமொத்தமாகவே சத்ரியர்களாக வாழ்ந்து அரசர்களாக ஜமீன்களாக பாளையக்காரர்களாக படை தளபதிகளாக போர் வீரர்களாக வாழ்ந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்

2.ஒருசில சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் மட்டும் படை ,பாதுகாப்பு, போர்களில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் தங்கள் சமூகத்திலேயே பிற பகுதியில் வாழ்ந்தவர்களை குறைவாக என்னியதும் நாங்கள் சத்திரியர்கள் என்று தங்களை தனித்து அடையாள படுத்திகொள்வதும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று

        அதேபோல் நம் மாநிலத்தில் ,பிற மாநிலங்களில் இருந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சில சமூகம் அவர்களின் மாநிலத்தில் சத்திரியர்களாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது

          இன்று கேரளா என்ற மாநிலமாக உள்ள திருவாங்கூர் தேவஸ்தான ஆட்சியில் படை தளபதி யாக இருந்து ஆயுதம் ஏந்தும் உரிமை யை வைத்திருந்த அனந்த பத்மநாபன் நாடார் வம்சாவளி யில் வந்தவர்கள் சத்ரியர்கள் என்று தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் கூறியதை விமர்சனம் செய்யும்

            உங்களை பார்த்து ஒரே ஒரு கேள்வி?
தமிழ்நாட்டை ஆண்ட எம் ஜி ஆர் ,கலைஞர், ஜானகி, ஜெயலலிதா இவர்களை தான் நீங்கள் சத்ரியர்களாக ஏற்பீர்களா ?

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு நாடார் சமூகத்தின் பாராட்டு விழா: ஒரு மாபெரும் தொடக்கம்

ன்றி:-
Mr.Arul Rathinam
மிழ் மூக ஊபேவை.

மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து போராடி வருகிறார்கள். அந்த தியாகப் பணிக்காக முதல் முறையாக நாடார் சமூகம் தனது பாராட்டினை தெரிவித்து விழா நடத்தியிருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். (அதே நேரத்தில் இதுபோன்ற பாராட்டுகள் எதையும் மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்பார்க்காமல், எப்போதும் 'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்பதில் உறுதியாக நின்று போராடி வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்).

காலம் தோரும் மாறும் போராட்டங்கள்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மோதல் போக்கு சமூகத்தில் நிலவுகின்றது.

'இடங்கை - வலங்கை மோதல்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 'இடங்கை - வலங்கை சாதி மோதல்' என்பதுதான் தமிழ் மண்ணில் பெரும் போராட்டமாக இருந்தது. எந்த சாதிக்கு என்ன உரிமை, விழாக்களில் பயன்படுத்தும் கொடிகள், சின்னங்கள் என்ன, என்பதெற்கெல்லாம் பெரும் கலவரம் நடந்தது. இன்றைய காலத்தில் "இடங்கை - வலங்கை" பிரச்சினையை கண்டுகொள்ள எவரும் இல்லை.

சூத்திரர் பட்டம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, யாரெல்லாம் சூத்திரர் இல்லை. யாரெல்லாம் தீண்டத்தகாதோர் இல்லை என்று மெய்ப்பிப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தனித்தமிழ் இயக்கம் மற்றும் சமய எழுச்சி இயக்கங்கள் என்பதெல்லாம் கூட சூத்திர பட்டத்தை துறப்பதற்கான வழிகளில் ஒன்றாக இருந்தன. இன்று அந்த போராட்டங்கள் இல்லை.

சத்திரியர் பட்டம்

கடந்த நூற்றாண்டு வரை சத்திரியர் யார் என்கிற போராட்டங்கள் நடந்தன. உண்மையில் சௌந்திரபாண்டியன் நாடார் அவர்கள் சத்திரிய போராட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக மாறியதும் கூட நாடார் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற போராட்ட காலங்கள் கடந்த நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டன. இடங்கை - வலங்கை போராட்டம், சூத்தர விடுதலை, சத்திரியப் போராட்டம் என்பதெல்லாம் இப்போது வரலாற்று தழும்புகள் மட்டுமே.

1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் ஏற்கபட்ட பின்னர் 'உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி' என்கிற பாகுபாடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.

இடங்கை - வலங்கை போராட்டம், சத்திரியப் பட்டம் என்பதற்கெல்லாம் இப்போதும் யாராவது குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் - அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை. கற்பனையான கடந்த காலத்தில் உழல்கிறார்கள் என்பதே உண்மை ஆகும்

மருத்துவர் அய்யாவின் சமூகநீதி இயக்கம்

சாதி ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான கருத்துகளை முற்றிலுமாக ஒழித்து, ஒரு நாகரீகமான சமூகத்தை படைப்பதற்கான சமுதாயப் பணியை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்கள்.

சாதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டை முதல் கோரிக்கையாக வைத்து, ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். 'ஒவ்வொரு சமூகமும் முன்னேறினால் நாடு தானாகவே முன்னேறியதாகிவிடும்' என தந்தை பெரியார் காட்டிய வழியில் மருத்துவர் அய்யா அவர்களும் போராட்டங்களை முன்வைத்தார்கள்.

தமிழக வரலாற்றின் மாபெரும் சாதனையான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீடு எனும் சாதனையை மருத்தவர் அய்யா அவர்கள் படைத்தார்கள். இது 60 ஆண்டுகள் தாமதத்துக்கு பின்னர் கிடைத்த நீதி ஆகும்.

அனைத்து சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் ஏராளமான சமூக ஒற்றுமை மாநாடுகளை நடத்தினார்கள். தேவேந்திரகுல சமூகத்தினருடன் சேர்ந்து ஒருதாய் மக்கள் மாநாட்டை நடத்தினார்கள். அருந்ததியர், முத்தரையர், இஸ்லாமியர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்காகவும் மாநாடுகளையும், போராடங்களையும் மருத்துவர் அய்யா நடத்தினார்கள்.

எல்லா சாதிகளும் சமம். ஒவ்வொரு சாதிக்கும் அதன் விகிதாச்சார எண்ணிக்கைக்கு ஏற்ப 'வகுப்புவாரி உரிமை' என்கிற ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி பாடுபடும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு - இபோதாவது - நாடார் சமூகம் பாராட்டுவிழா நடத்தியிருப்பது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு ஆகும்.

உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்

வாழுமிடம், சாதி, பிறப்பு, நம்பிக்கை, மொழி என எந்த அடிப்படையிலும் எந்த ஒரு மக்கள் குழுவும் ஒதுக்கப்படாத, புறக்கணிக்கப்படாத (Non-discrimination) ஒரு உன்னதமான தமிழ்நாட்டை மருத்துவர் அய்யா அவர்கள் உருவாக்கி காட்டுவார்கள். அதற்காக நாம் பாடுபடுவோம்.

'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) எனும் ஐநா அவையின் உலகளாவிய வளர்ச்சி இலக்கினை (UN Sustainable Development Goals 2030) மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் சாத்தியமாக்குவோம்.

புதன், 4 ஜனவரி, 2017

தமிழனை எதிர்க்கும் மாதர் சங்கம்.

மாங்கெட்மார் ங்ம்:-

சிம்பு பிறந்த நேரமோ என்னமோ தெரியலைங்க சிம்பு என்றாலே வம்பு என்பதாகிவிட்டது. அந்த அளவுக்கு பாவம் இந்த மனுஷன் ஏதாவது ஒரு வம்பில் மாட்டிக் கொள்கிறார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு அடங்கியது. பீப் பாடலால் சிம்புவின் இமேஜ் கண்டபடி டேமேஜ் ஆனது. சிம்பு மீண்டும் தேடிச் வம்பே வந்திருக்கிறது. அதாங்க இப்போ த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் AAA என்ற படத்தில் நடித்துவரும் சிம்பு ட்ரெண்ட் சாங் ஒன்னு ரிலீஸ் பண்ணது அவருக்கு வினையா மாறிடுச்சு. இன்று செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பாடுவதை நடிகர் சிம்பு நிறுத்த வேண்டும், இனி அவர் திருந்த வேண்டும் என கூறியுள்ளார்.  மாதர் சங்கம் சிம்பு பீப்சாங், இப்போ அதே சிம்புவிற்கு எதிராக ட்ரெண்ட் சாங்க்கு கொடி பிடிக்கும் இதே மாதர்சங்கம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற ஒரு இளம் ஒரு கொடூர மிருக்கத்தால், அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் செத்து மடிந்த அவளுக்காக ஏன் கொடி பிடிக்கவில்லை? விழுப்புரத்தில் நவீனா என்ற சிறுமியை காம கொடூர மிருகம் என்னை ஊற்றி கொளுத்திய போது எங்கே சென்றது இந்த மாதர் சங்கம்? கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி என்ற கல்லூரி மாணவியை உதயகுமார் என்ற கொடூர மிருகம் அடித்தே கொன்றபோது எங்கிருந்தார்கள் இந்த மாதர் சங்கம்? கடந்த சில வருடங்களாக காதலிக்க மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீச்சு நடந்தேறியது. இப்போது அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும் கட்டையால் அடித்தும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலைவெறியை தீர்க்கும் கொடுமையான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேறிய வேலையில் டப்பு வாங்கிக்கிட்டு பீப்புக்கு போராடும் இந்த மாதர் சங்கத்திற்கு ஏன் இந்த வேலை? சிம்புவிடம் வம்பிழுக்க சொல்வது யாராக இருக்கும்?

திங்கள், 2 ஜனவரி, 2017

விவசாயிகளுக்காக போராடும் பாமக.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
உழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த
வலியுறுத்தி 10ஆம் தேதி பா.ம.க. போராட்டம்!
உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் பதவிகளை தக்க வைக்க போராடுவது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் உழவர்களின் உயிரிழப்புகள் வழக்கமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 84  உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 10 விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும், அரியலூர், பெரம்பலூர்,  ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் நடந்து வந்த உயிரிழப்புகள் இப்போது தெற்கில் தூத்துக்குடி மாவட்டம் வரையிலும், வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் வரையிலும் நீண்டிருக்கின்றன.  திருண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் மண்ணு என்ற விவசாயி அதிர்ச்சியிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் முருகன் என்பவர்  விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட ஏமாற்றமும், விரக்தியும் தான் அவர்களின் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.
125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி பிரச்சினைக்கு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் தீர்வு காணத் தவறியதும், சொல்லிக் கொள்ளும்படியாக  பாசனத் திட்டங்களை செயல்படுத்தாததும் தான் விவசாயிகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஆகும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற்று குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் உதவியிருந்தால் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; மாறாக மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தை எச்சரித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட மத்திய அரசு, கர்நாடகத்திற்கு  ஆதரவாக செயல்பட்டது. இதையெல்லாம் செய்வதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழகமும் தவறி விட்டது. இவர்கள் செய்த தவறுகளால் அப்பாவி விவசாயிகள் உயிரிழக்க வேண்டியிருக்கிறது.
இப்போது தான் இப்படி என்றில்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2423 விவசாயிகளும், முந்தைய திமுக ஆட்சியில் 3390 உழவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் ஓர் ஆண்டு கூட குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்யப்படவில்லை. தொடர்ந்து இரு ஆண்டுகளாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், குடும்ப சுமையையும் தாங்க முடியாமல் உழவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் உழவர்களின் பிரச்சினைகள் என்ன? என்பதை அறிந்து அவர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதன் மூலம் தான் அவர்களின் உயிரிழப்பைத் தடுக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு உழவர்களின் துயரங்கள் தெரியவில்லை. மாறாக தங்கள் பதவி நாற்காலிக்கு மேல் தொங்கும் கத்தியிலிருந்து எப்படி தப்புவது என்ற பதற்றத்தில் கால்களை கண்ட இடத்திலெல்லாம் விழுந்து வணங்கி பதவியை காப்பாற்ற கெஞ்சுகின்றனர். மொத்தத்தில் இவர்களை தேர்வு செய்ததற்காக தமிழக மக்கள் வருந்துகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவாவது உதவி செய்து கைத்தூக்கி விடுவதன் மூலம் தான் அவர்களை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின்  பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.  ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
எனது தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.!

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...