செவ்வாய், 14 மார்ச், 2017

//சாதி ஒழிப்பில் போலிகள் :--


#போலி_சாதி_ஒழிப்பாளர்கள் :--
சாதிகளை உருவாக்கியதே ராமதாஸ் தான்,
ராமதாஸ் பிறப்பதற்க்கு முன் சாதியே இல்லை,
ராமதாஸ் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தலித் என்ற புதிய சாதியை தோற்றுவித்து அடிமைபடுத்தினார்,
அவர்களை அடக்க ஆதிக்க சாதிவெறியர்களை உருவாக்கினார்,
ராமதாஸ் என்ற நபர் இல்லை என்றால் சாதியே தமிழனுக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
ராமதாஸ் அரசியலுக்கு வருவதற்க்கு முன்பு எங்குமே சாதிய கலவரங்கள் நடந்ததில்லை,
தலித்கள் அடிமைகளாகவே இருந்ததில்லை,
தலித்களுக்கு ஆதிக்க சாதிகள் தங்கள் பெண்களை மகிழ்ச்சியோடு மணமுடித்து கொடுத்தனர்,
ராமதாஸ் அரசியலுக்கு வந்த பிறகு இதை அப்படியே மாற்றி விட்டார்...

ராமதாசின் மூதாதையர்களே வருணாசிரம முறையையும்,
நான்கு வர்ணத்தையும் உருவாக்கினார்கள்,
சூத்திரர்களை வேசிகளின் மகன் என ராமதாசின் கொள்ளு தாத்தாவே கூறினார்,

வெண்மணியில் நடைபெற்ற தலித்களின் கொலைக்கு ராமதாசின் சாதிய வெறியே காரணம்,
தர்மபுரி காலனி குடிசைகளை ராமதாசு தான் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டுப் போய் கொளுத்தினார்,
காட்டுமன்னார் கோவிலில் பேத்தியை கொன்ற தெலுங்கு ரெட்டி தாத்தாவிற்க்கு ராமதாஸ் தான் கத்தியை சானை பிடித்து கொடுத்தார்,
இளவரசன் அடிப்பட்டு செத்துப் போன ரயிலை ராமதாசு தான் ஓட்டி வந்தார்,
கோகுல்ராஜை கொலைச் செய்ய சொல்லி யுவராஜை ஏவி விட்டதும் ராமதாஸ் தான்,
உடுமலை சம்பவத்திற்க்கு கொலைக்கு வண்டி கொடுத்து ஆள் அனுப்பியதே ராமதாசு தான்,

ராமதாஸ் இல்லாமல் போய் விட்டால் மறுநாளே சாதி ஒழிந்து போய்விடும்,
சாதியை மறந்து மக்கள் ஒன்றாகி விடுவார்கள்,
கொலைகளே நடக்காது,
சாதி சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு விடும்,
தலித் என்ற வார்த்தை ரப்பர் கொண்டு அழிக்கப்பட்டு விடும்,
கோவில் கருவறை முதல் கல்யாணம் வரை சாதியே பாராமல் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்....

சாதியை தமிழகத்திற்க்கு அறிமுகப்படுத்திய சாதிவெறி பிடித்த ராமதாஸ் ஒழிக...!

   இப்படிக்கு,
இராமதாஸ் உருவாக்கிய சாதியை ஒழிக்க அனுதினமும் சோறு தண்ணி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் புரட்சி போராளிகள் சங்கம்...!

நன்றி .! திரு Anand Vandayar

குடிநீர் பிரச்சனை ஆர்ப்பாட்டம் பாமக

14-03-17 இன்று தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சனையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.!
அதன் படி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
ஆர்ப்பாட்டத்தில் மாநில துனை பொது செயலாலர் சி.வடிவேல் கவுண்டர்.,மாநில சிறுபான்மை செயலாலர் சையத் மன்சூர் நகர செயலாலர் மணிகண்ணன் முதலானோர் கலந்து கொண்டனர்.!

ஞாயிறு, 12 மார்ச், 2017

வஞ்சிக்கப்பட்ட வன்னியர் சமூகம் :--

தமிழத்தேசியத்திற்காக புலவர் கலியபெருமாள் (வன்னியர்) போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வன்னிய இளைஞர்களை காவல்துறை உயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுப்பதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழரசன் ஆயுதம் தாங்கி போராடினார் என்ற காரணத்திற்காக இன்னமும் எங்கள் இளைஞர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்என்பது உங்களுக்குத் தெரியுமா?

அரியலூரைச் சுற்றியுள்ள வன்னியர் நிலங்களை வளைத்து சிமெண்டு தயாரிக்கும் கம்பெனிகள் வன்னியர்களை அங்கே வேலைக்கே சேர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த சாதியில் பிறந்து விட்டான் என்ற ஒரே காரணத்திற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் நக்சலைட்டு என்று பெயரிடப்பட்டு காக்கா குருவி போல சுட்டுத்தள்ளப்பட்டவர்கள் அப்பாவிகள் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வீரப்பன் சொந்தக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பார்த்தே அறியாதவர்கள் தூக்கு மேடை வரை சென்றார்களே அது உங்களுக்குத் தெரியுமா?

வீரப்பன் வேட்டையிலே கொத்துக்கறி போடப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

(வெங்காய) பெரியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, தன் பெயரையே சாதி மறுப்பு என்று சூட்டிக்கொண்டு தனது பட்டப் பெயர்களைத் துறந்து  இன்று அசிங்கப்பட்டு நிற்பவர்கள் இந்த  வன்னியன் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, இன விடுதலை என்று நம்பிப் போய் சொந்த சாதியை நட்டாற்றிலே தவிக்க விட்டவன் இந்த வன்னியன் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அறிவு ஜீவிகள் எல்லாம் அவனவன் சாதி விடுதலைக்காகப் போராடும் போது, வன்னிய அறிவுஜீவிகள் எல்லாம் சாதி ஒழிப்பிற்கு போராடுகிறான் !

யாருக்கு நட்டம்?

பெற்ற தாயை பிச்சை எடுக்க வைத்து விட்டு, காசிக்கு போய் கோதானம் கொடுத்தானாம் ஒருவன், அந்த கதைதான் இன்றைய வன்னியர் நிலைமை !

வியாழன், 9 மார்ச், 2017

இட ஒதுக்கீடு போராட்டம் .!! உரிமைக்காக உயிரை தியாகம் செய்த சொந்தங்கள்.!

சுட்டு கொள்ப்ட்சொந்ங்ள் :-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நான் தலைமையேற்றிருந்தேன். போராட்டத்தின் முதல் நாளிலேயே நானும் மற்ற தலைவர்களும் கைது செய்யப் பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டோம்.

சமூக நீதிக்கான இந்த போராட்டத்தை எப்படியாவது சிதைத்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த பொறுப்பு முதலமைச்சர் நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், ப.உ.சண்முகம், வி.வி.சுவாமிநாதன் ஆகியோர், போராட்டம் தொடங்கிய 3 மணி நேரத்தில் அடக்குமுறையை கட்டவிழ்த்து  விட்டனர்.

போராட்டத்தில் முதல் பலி

தென்னாற்காடு மாவட்டம் பார்ப்பனப்பட்டியை அதிகாலை 3.00 மணிக்கு முற்றுகையிட்ட காவல்துறையினர், அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார்கள். அதிகாலை 3.00 மணிக்கு அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் எந்த அளவுக்கு இருள் இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும். அந்த இருட்டில் அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, முழங்காலுக்கு கீழே சுட்டு எச்சரிக்கை செய்யாமல் காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டனர் காவல்துறையினர். இதில் குண்டடிபட்ட வீரப்பன் என்ற 25 வயது இளைஞர் தட்டுத்தடுமாறி மாரியம்மன் கோவில் வாசலில் மயங்கி விழுந்தார்.

வீரப்பனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தை ரெங்கநாதனை காவல்துறையினர் சரமாரியாக  சுட்டுக் கொன்று அவரது உடலை கால்களைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த சிறுவனை துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்கள் காவல்துறையினர்.
காவல்துறையினரின் மிருகத்தனம்
அதேநாளில் கோலியனூர் கூட்டுச் சாலையில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்கார வேலு ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏழுமலை 25 வயது மட்டுமே நிறைந்த இளைஞர். அவர் மறைந்ததால் அவரது மனைவி அஞ்சலாட்சியும், ஒரு வயதுக்  குழந்தையும் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.

முண்டியம்பாக்கம் சிங்காரவேலு துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்த நிலையில் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், 25 மணி நேரமாக அவரை மருத்துவமனைக்குக் கூட எடுத்துச் செல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தராமலும் காவல்துறையினர் கொடுமைப்படுத்திக் கொன்றனர்.

கயத்தூரைச் சேர்ந்த முனியன், முத்து, தாண்டவராயன் ஆகியோரும் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார். இவர்களில் முனியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்,  தாகத்தை தணிக்க தண்ணீர் தரும்படி கேட்டான். ஆனால், தண்ணீர் தர மறுத்த காவலர்கள் முனியனின் வாயில் சிறுநீரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். முனியன் கொல்லப்பட்ட போது அவருக்கு திருமணமாகி 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அப்போது அவரது மனைவி ஜெயா 7 மாத கர்ப்பினிணியாக  இருந்தார். ஜெயாவின் கதறலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘‘ கதறிக்கதறி அழும் அந்த கர்ப்பிணியின் கண்களுக்கு சுட்டெரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் பொசுங்கிப் போயிருந்திருப்பார் அந்த பொல்லாத போலீசார்’’ என்று இரங்கல் செய்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

மற்றொருவரான முத்து திருமணமாகாதவர். அவரது உடலைப் பார்ப்பதற்கு ஓடி வந்த அவரது தாயை, மகனின் உடலைகூட பார்க்க விடாமல் துரத்தியடித்தனர்.

உத்தமவீரன் தாண்டவராயன்

தாண்டவராயன் படுகொலை செய்யப்பட்ட விதம் தான் நினைத்துப் பார்க்க முடியாததாகும். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாண்டவராயனை அவரது உயிர்நிலை அருகில் சுட்ட காவல்துறையினர், அவர் இறந்து விட்டாரா? என்று சோதித்து பார்த்துள்ளனர். அவர் உயிருடன் இருப்பதை அறிந்து  மார்பில் துப்பாக்கிக்  கட்டையால் குத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாண்டவராயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். தாண்டவராயனின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அவரது மறைவு குறித்த இரங்கல் செய்தியில்,‘‘நாட்டை நாசப்படுத்துபவன் எல்லாம் நடமாடிக் கொண்டிருக்கையில் உரிமைக்காக போராடிய உத்தமவீரன் போலீஸ் கொடுங்கோலர்கள் சுட்டதால் படுகாயமுற்றுத் தாள முடியாது மீளா இடம் நோக்கிப் போய்விட்டான். உழைப்பை நேசிக்கும் பாட்டாளியைப் போல் வன்னியர் சங்கத்தை நேசித்து வளர்த்த  தீரன் தாண்டவராயன் மறைவு நெஞ்சத்தை  விட்டு நீங்காத வடுவாகும்’’ என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
கோலியனூர் கோவிந்தனின் மரணமும் இத்தகையது தான்.  சதிகாரர்கள் சுட்டும் சாகாமலிருந்த கோலியனூர் கோவிந்தனைக் கொலைவெறி சண்டாளர்கள் நாயை அடித்துத் தூக்கிப் போடுவதைப் போல வேனில் தூக்கிப் போட்டு பூட்ஸ் கால்களாலேயே எட்டி எட்டி உதைத்தும், துப்பாக்கி அடிக்கட்டையால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.

சமூகப் புரட்சியாளன் தொடர்ந்தனூர் வேலு

கோலியனூர் கோவிந்தன், தொடர்ந்தனூர் வேலு  ஆகியோரும் சமூக நீதிக்காக போராடிய போது காவல்துறையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் தான். இவர்களில் கோவிந்தன் 24 வயது மட்டுமே ஆன திருமணம் ஆகாத இளைஞர். அவரை இழந்து வாடிய குள்ளக் கவுண்டர் & பூரணியம்மாள் ஆகிய பெற்றோருக்கும், 4 உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தேன்.

வேலுவோ சமூக புரட்சியாளன்.‘‘சாதிகளின் சனத்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்போர் குறுகிய நோக்கம் கொண்டவர்கள்  எனப் பிதற்றும் குறுமதியாளர்களுக்கு  சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஓர் ஏழை ஆதிராவிட பெண்ணை மணந்து கொண்டவன் தான் நம் மனங்களில் இன்று இடம் பெற்ற மாவீரன் வேலு. நாட்டில் இன்று பலர் பேச்சுடன் நிறுத்திக் கொள்ளும் புரட்சிகர எண்ணங்களை செயல்படுத்திக் காட்டிய  வன்னிய செம்மலர் அவன்’’ என்று அவனது வீரமரணத்திற்கு வீர வணக்கம் செலுத்தினேன்.
ஓரத்தூர் ஜெகநாதனும் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டவர் தான். துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகநாதன் குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கெஞ்சினான். ஆனால், இரக்கமற்ற காவலர்கள் தண்ணீர் தர மறுத்து விட்டனர். அதன்பின்னர் குண்டுபாய்ந்த இடத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நாவால் நக்கி உயிர் பிழைக்க ஜெகநாதன் முயன்றார். ஆனால், அதையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்தனர்.

புறநானூற்று வீரன் தேசிங்கு

கொள்ளுக்காரன்குட்டை என்ற இடத்தில் சிறுதொண்டமாதேவி தேசிங்கு என்ற 20 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.  புறநானூற்று வீரனுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால்  தேசிங்குவைத் தான் சொல்ல வேண்டும். கொள்ளுக்காரன் குட்டையில் 30, 40 பேருடன் தேசிங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதைக் கண்டு அஞ்சாத தேசிங்கு, தனது சட்டைக் கழற்றி பரந்த முதுகைக் காட்டி ‘‘ சுடு.... சுடு’’ என்று முழங்கினான். ஆனால், இரக்கமற்ற, காட்டுமிராண்டி காவலர்கள் தேசிங்குவின் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சிறையில் நடந்த கொலைகள்

போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த   கொழப்பலூர் முனிசாமி கவுண்டர் என்பவர் சிறைக்காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் பேரங்கியூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த காவல்துறையினர் அண்ணாமலைக் கவுண்டர் என்பவரை அடித்துக் கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் அமரத்தனூரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு,  தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவர் இறந்ததற்கான காரணம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி எரித்து விட்டனர்.

மதுராந்தகம் வட்டம் வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், சேலம் மாவட்டம் சிவதாபுரம் குப்புசாமி, காஞ்சி மாவட்டம் மொசரவாக்கம் கோவிந்தராஜ் ஆகியோர் சிறைக்கொடுமையால் படுகொலை செய்யப் பட்டனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரையும் காவல்துறையினர் கொடுமைப்படுத்தியே கொலை செய்தனர்.

பெண்கள் மீதும் ஒடுக்குமுறை

அச்சரப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் வன்னியர் அல்லர். அவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்தனர். அவர் தாம் வன்னியர் இல்லை என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் அவரை கோவை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர்கள் தவிர காவல்துறையினரின் தாக்குதலில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகினர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வன்னிய மக்கள் வழிபடும் கோவில்கள்  சூறையாடப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு துணையாக இராணுவமும் வரவழைக்கப்பட்டது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களால் வன்னியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

அப்படியும் கூட வன்னியர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை அடக்க முடியவில்லை. போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் தமிழகத்தில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை. இந்தியாவில் வேறு எங்குமே இப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாறு. அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தைத் தாண்டியும் போராட்டம் நீடிக்கும் என்று அஞ்சிய அதிகாரிகள், மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த என்னை சந்தித்து, போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி வன்னியர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தல் விடுத்து அறிக்கை வெளியிடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி நானும் அறிக்கை வெளியிட்டேன். அதையேற்று 23&ஆம் தேதியுடன் போராட்டம் கைவிடப்பட்டது.

திமுக முக்கியக் காரணம்

வன்னியர்களுக்கு எதிராக இத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு திமுக முக்கியக் காரணம் ஆகும். ஆனால், திமுகவோ அல்லது மற்ற கட்சிகளோ இந்த அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை குறித்து வாயைத் திறக்கவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை.வன்னியர்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சமூக நீதி கோரி போராட்டம் நடத்தியதற்காக நான் உட்பட 20,461 பேர் கைது செய்யப்பட்டோம். நான் 27 நாட்கள்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். மற்றவர்களும் பல நாட்கள் சிறையில் வாடினார்கள்.
வன்னியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள் குறித்து அப்போது வெளிவந்த தராசு, பல்லவராயர் போன்ற வார இதழ்கள் தான் சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டன. தினந்தந்தி, மாலைமலர் போன்ற நாளிதழ்கள் ஓரளவு செய்திகளை வெளியிட்டன. மற்ற ஊடகங்கள் இந்த அடக்குமுறைகள் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்த போராட்டம் குறித்து போராட்டக்களத்தில் நான் இருக்கும் படத்துடன் கால் பக்கம் அளவுக்கு செய்தி வெளியிட்டது.

மரம்வெட்டிப் பட்டம்

அதேநேரத்தில் சாலையில் போக்குவரத்தை தடுக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தில் ஒருசில இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையின் ஓரத்தில் கிடத்தப்பட்டன. இதுபற்றி செய்தி அறிந்ததும் ஊடகங்கள் அதுகுறித்து ஒப்பாரி வைத்தன. எங்களுக்கு மரம் வெட்டி என்று பட்டங்கள் வழங்கின. பல பத்திரிகைகள் பல ஆண்டுகளுக்கு என்னை மரம்வெட்டி இராமதாசு என்றே எழுதின. உண்மையில் 100 மரங்கள் கூட வெட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பை ஏற்படுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டோம். அவற்றையெல்லாம் பாராட்ட யாருக்கும் மனம் வரவில்லை. மாறாக, முன்பு மரம் வெட்டியதற்காக இப்போது மரம் நட்டு பரிகாரம் தேடுவதாக ஊடகங்கள் குதர்க்கமாக எழுதின.
சரி... அந்த ஆதங்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.
எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து ஏராளமான இழப்புகளை சந்தித்த பிறகும் கூட எங்களுடன் பேச்சு நடத்த பொறுப்பு முதலமைச்சர் நெடுஞ்செழியன் மறுத்தார். அதற்கான அடிப்படையே இல்லை என்று கூறினார். ஆனால், என் மீதும், வன்னியர் சங்கத் தலைவர் சா. சுப்பிரமணியன் மீதும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொக்கரித்தார்.

எம்.ஜி.ஆருடன் பேச்சு

எங்கள் போராட்டத்தின் போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர் தமிழகம் திரும்பியதும்  அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்துப் பேச்சு நடத்தினார். 25.11.1987 அன்று பேச்சு வார்த்தை நடந்தது. அதில் எங்களின்  கோரிக்கைகளை முன்வைத்தோம். அதைத் தொடர்ந்து அனைத்து சாதித் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தை எம்.ஜி.ஆர் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முதன்முதலில் என்னைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். அப்போது இட ஒதுக்கீட்டுக்காக வன்னியர் சங்கம் நடத்திய போராட்டங்கள் குறித்தும், அதை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாதது குறித்தும் விரிவாக விளக்கினேன்.

அதுமட்டுமின்றி, வன்னிய மக்களின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினேன்.‘‘ எங்களின் கோரிக்கை மற்றும் அதில் உள்ள நியாயங்கள் குறித்து உங்களை சந்தித்து பேசுவதற்காக 10 நிமிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி பண்ருட்டி இராமச்சந்திரன் மூலமாக கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அது நடக்கவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக அமைச்சர் பண்ருட்டி  இராமச்சந்திரன் அவரது இல்லத்திற்கு வரும்படி கூறுவார். நாங்களும் சென்று காத்திருந்து, சந்திப்போம். ஆனால், கடைசிவரை நேரம் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார்’’ என்று கூறினேன்.
அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் அதுகுறித்த விவரங்களை தனது கவனத்திற்கு கொண்டு வராதது ஏன்? என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கடிந்து கொண்டார். கூட்டம் முடிந்து எம்.ஜி.ஆர் வெளியே வரும் போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ‘‘வன்னியர் சங்கம் வாழ்க’’, ‘‘மருத்துவர் அய்யா வாழ்க’’ என்று முழக்கமிட்டனர். எம்.ஜி.ஆரின் வரலாற்றில் அவருக்கு முன் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவரை வாழ்த்தி முழக்கமிடாமல்  மற்றவரை வாழ்த்தி முழக்கமிட்டது அதுவே முதலும், கடைசியுமாக இருக்கும்.

13% இட ஒதுக்கீடு

இடஒதுக்கீடு குறித்த பேச்சுக்களின் போது வன்னியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் 13 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருந்ததாகவும், அதற்குள் அவர்  மறைந்து விட்டதால் அது தொடர்பாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் பின்னர் அறிந்தேன். அப்போது சட்ட அமைச்சராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த குட்டையான அமைச்சர் தான் அனைத்துக்கும் காரணம் என்று அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரே பின்னாளில் என்னிடம் தெரிவித்தனர்.

இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை குலைக்கும் வகையில் திமுக அண்ணா அறிவாலய திறப்பு விழாவை நடத்தியது, 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் துரோகம் செய்தது என இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளமாக உள்ளன. அவை குறித்தெல்லாம் புதிய தலைமுறை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு போராட்ட வரலாறு குறித்த தனி நூல் எழுதும் திட்டமும் உள்ளது. அப்போது இது குறித்தெல்லாம் விரிவாக எழுதுகிறேன்.
--மருத்துவர் இராமதாசு அய்யா.
நிறுவனர் - வன்னியர் சங்கம்.

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...