செவ்வாய், 9 மே, 2017

வன்னியரை வாழவைத்த மகான்கள் ???


வாழப்பாடி ராமமூர்த்தி கூத்தப்படையாட்சி என்கிற நான், என்று தமிழில் பிரமாண பத்திரம் வாசித்து மத்திய அமைச்சர் பொறுப்பேற்ற முதல் தமிழர்,

காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெருமைக்குரிய தமிழர்,

வன்னிய இனத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் போக்கு பிடிக்காமல் காங்கிரஸில் இருந்தும் வெளியேறி அர்ஜீன் சிங் தலைமையிலான திவாரி காங்கிரஸின் தமிழக தலைவரானார், அப்போதிலிருந்தே மருத்துவர் ராமதாசுடன் இணக்கமாக இருந்ததோடு 1996 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றார்.!

பிறகு தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய வாழப்பாடி ராம்மூர்த்தி தொடர்ந்து பாமகவுடன் தோழமையோடு இருந்தார், 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுடன் இணைந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றார்.

தமிழக ராஜீவ் காங்கிரஸ் சார்பில் தனது சொந்த தொகுதியான சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு மூன்றாவது முறையாக மத்திய அமைச்சரானார்.!

ஜெயலலிதாவின் பிடிவாத குணத்தால் பதிமூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிட மீண்டும் தேர்தல் வந்தது.!

1999 நாடாளுமன்ற தேர்தலிலும் பாமகவுடன் இணைந்து அதே ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றார், இப்போது கூட்டணிக்கு தலைமையேற்றவர் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவரான கருணாநிதி. !

மற்ற கட்சிகளுக்கு தனித்தனியாக தொகுதிகளை பிரித்து கொடுத்த கருணாநிதி பாமக மற்றும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 7 தொகுதிகளை கொடுத்தார்.

அங்கே தொடங்கியது விரிசல், வாழப்பாடி ராமமூர்த்தி தனது கட்சிக்கு 2 தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடிக்க, ஒரு தொகுதி தருகிறேன் நீங்கள் மட்டும் போட்டியிடுங்கள் என்று மருத்துவர் ராமதாசு கண்டிப்புடன் கூறிவிட, மீண்டும் சேலம் தொகுதியில் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி அந்த தேர்தலில் தோல்வியுற்றார், மருத்துவருடன் மனக்கசப்பு கொண்டு கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.!

கருணாநிதியின் தூண்டுதலை ஏற்ற வாழப்பாடி ராமமூர்த்தி #வன்னியர்_பேரவை என்ற அமைப்பை தொடங்கினார், கொடி அறிமுகம் செய்து ஊர் ஊராக சென்று கொடியேற்றி பாமகவினருக்கு வலைவிரித்தார், ஆசை வார்த்தைகள் பாமகவினரின் மனங்களில் விதைக்கப்பட்டது ஆனாலும் அவர்கள் விரித்த வலையில் காய்ந்துபோன கருவாடு கூட கிடைக்கவில்லை. முதற்கட்டமைப்பு உருவாகும் முன்பே வன்னியர் பேரவை தன் முடிவுரையை எழுதிக்கொண்டது.!

ஓரு கால கட்டத்திற்கு மேல் அவரால் வன்னியர் பேரவையையும் கட்சியையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை, இறுதியில் காங்கிரசோடு கரைந்துபோனார், அங்கேயும் மதிக்க ஆளில்லாமல் அரசியல் அனாதையனார்.!

1984ல் அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருந்தவர் ஜெகத்ரட்சகன், சில முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதாவால் ஆர்.எம்.வீரப்பன் தூக்கி எறியப்பட்டபோது அவரோடு கைகோர்த்து அதிமுகவை விட்டு வெளியேறி ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட வன்னியர்.

1999 நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இணைந்த எம்.ஜி.ஆர் கழகத்திற்கு கிடைத்த ஒரு தொகுதியில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் வெற்றியும் பெற்றார், மீண்டும் நாடளுமன்ற உறுப்பினரானதும் தனது வியாபார எல்லைகளை விரிவுபடுத்தினார். இவருக்கும் ஏழரைச்சனி கருணாநிதியின் உருவிலேயே வந்தது, கருணாநிதியின் பரிபூரண ஆசியோடு #வீர_வன்னியர்_பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். !

ஜெகத் அய்யா என்று தனக்கு தானே அடைமொழி சூட்டிக்கொண்டு பாமகவிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கினார்.

மருத்துவர் ராமதாசு அரசியலுக்கு வந்து வன்னியர்களை ஏமாற்றிவிட்டதாகவும் தான் வன்னியர்களை ரட்சிக்கப்போவதாகவும் கதையளந்தார், நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வன்னியர் வளர்ச்சி வங்கி தொடங்கி வன்னியர்களை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்தப்போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார், வீர வன்னியர் பேரவை அரசியல் இயக்கமாக எந்த நாளும் மாறாது என்று ஊடகங்களில் அறிக்கைகளை வாசித்தார். பாமகவுக்கு எதிராகவே எழுதி பழக்கப்பட்ட ஊடகங்கள் ஜெகத்ரட்சகனை வானளாவ புகழ்ந்தன, ஆனாலும் இவரது வீர வன்னியர் பேரவை சுவர் விளம்பரத்தோடு முடிந்து போனது.

மனம்தளராத விக்கிரமாதித்தனை போல வீர வன்னியர் பேரவையை ஜனநாயக முன்னேற்ற கழகம் என்று கட்சியாக மாற்றினார், ஒரே தேர்தலோடு அந்த கழகமும் காலாவதியாகிப்போனது. கலங்கிப்போன ஜெகத்ரட்சகன் கருணாநிதியிடம் சரணடைந்தார், அந்த சமயத்தை எதிர் பார்த்திருந்த கருணாநிதி ஜெகத்ரட்சகனை ரட்சித்தார். ஒரு தேர்தல் தோல்வி அவரது அரசியல் வாழ்க்கையை புரட்டிப்போட்டது, இவரும் அரசியல் அனாதையாக்கப்பட்டார். தற்போது இவர் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்பது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே வெளிச்சம்.

தமிழக அரசியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த இரண்டு வன்னிய தலைவர்கள், மருத்துவர் ராமதாசு அவர்களை எதிர்த்து அரசியல் செய்து   அரசியல் அனாதைகளாக்கப்பட்டார்கள். அவர்களை நம்பி அவர்களை பின் தொடர்ந்தவர்களும் தொலைந்தே போனார்கள்.

இப்போது அரசியல் அரிச்சுவடியை கூட தொட்டு பார்க்காத சில சில்வண்டுகள் சில தலைவர்களால் ஏவப்பட்டுள்ளனர், காலங்காலமாக வன்னியர்களின் பாரம்பரிய சின்னமான அக்னி குண்டத்தில் அக்னியை அணைத்து விட்டு தாமரையை மலரவைக்க பகீரத பிரயத்தனம் செய்யும் கூட்டத்தின் ஏவல் நாய்கள். கூலிக்கு மாரடிக்கும் கலப்பின நாய்கள், மஞ்சள் படையின் வீரு கொண்ட நடையில் எழும் புழுதியில் மறையப்போவது உறுதி.

#பாட்டாளிகளின்_பட்டறையிலிருந்து//

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...