ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

வன்னியர் வரலாறும் வன்னியர் புராணமும்: :--


                உலகில் புராணம் கொண்ட ஒரே இனம் வன்னியர் இனம் மட்டுமே! வன்னியர் புராணம் என்பது ஸ்ரீ வீர ருத்ர மகாராசாவின் தோற்றத்தை பற்றி கூறும் நூல். இந்த ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராசாவின் வழிவந்தவர்களே வன்னியர்கள். ஸ்ரீ வீர வன்னிய மகாராசா சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில் பிறந்ததால் சம்பு மைந்தர் காப்பியம் என்றும், வன்னியர் புராணம் என்றும் அழைக்கப்படுகிறது!... வன்னி என்றால் அக்னி என்று பொருள்.
புராணம்:
                 தூர்வாசகர் முனிவருக்கும், கஜமோகிணிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வீல்வலன்" மற்றும் "வாதாபி" இவர்களின் தாயாரான கஜமோகிணி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
              வீல்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தான் இதனால் கோபம் அடைந்த அகத்திய மாமுனி வீல்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம் தெற்கு கடற்கறையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னாபுரியை அரசால ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்கன்னியை மணந்தான். இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியார் துணை இருந்தார்.
               பின்னர் வாதாபி தேவர்களை அதிகம் துன்புறுத்த ஆரம்பித்தான். இதைகண்ட நாரதமுனி சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களை கூறினார். அதேசமயம் சம்பு மகரிஷி சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள்பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு வன்னி (நெருப்பு) அந்த யாகத்தில்  விழச்செய்தார். யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து, வெள்ளை குதிரையில், கையில் வீரவாளுடன் தலையில் கிரிடத்துடன் ஸ்ரீவீர ருத்ர வன்னியர் தோன்றினார்.
               சிவபெருமானும்,தாய் பார்வதியும் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர் 1.கிருஷ்ண வன்னியர் 2.பிரம்ம வன்னியர் 3.சம்பு வன்னியர் 4.அக்னி வன்னியர் ஆவார்கள். இவர்களுக்கு காந்தா (சுசிலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் பெயர் இந்திராணி, நாரணி, சுந்தரி, சுமங்கலி
அசுரனுடன் போர்:
                                சிவப்பெருமாணின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய ருத்ர வன்னியர் சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்கா பரமேஸ்வரியின் கோயிலுக்கு சென்று போரில் தனக்கு துனையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப்படையும் வன்னியருடன் வந்தது. அந்த படையையும் அழைத்துக்கொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாகவே வழி விட்டது. அப்போது அவர்களுடன் சென்ற ஒரு நாயால் கடற்கறையை தாண்ட இயலவில்லை. எனவே அந்த நாய் மீண்டும் வன்னியர் அரண்மனைக்கே திரும்பியது.
              ருத்ர வன்னியரும், அவரது படையும் இரத்னாபுரியை அடைந்தவுடன், அசுரன் வாதாபி திருந்த ஒரு வாய்ப்பு தர எண்ணினான். நாரதரை சமாதானம் பேச அனுப்பினார். அது தோல்வியில் முடிந்தது பின்னர் அசுர படைக்கும் வன்னியர் படைக்கும் மாபெரும் போர் மூண்டது. மிக உக்கிரமாக நடந்த அந்த போரில் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உள்பட அனைத்து அசுரர்களும் வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர். இருப்பினும் சுக்ராசாரியார் யோசனைப்படி, நான்கு அசுர பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்து சென்றனர். போர் முழுவதும் முடிந்தவுடன் துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்துக்கு சென்றனர்.
              தம் இருப்பிடத்துக்கு சென்ற ருத்ர வன்னியர் மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலை தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயை கண்ட ருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவன்மார்களும் மடிந்து இருப்பார்கள் என தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்து கொண்டணர்.
            பிறகு ருத்ர வன்னியரின் நான்கு வீரமகன்களும் தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்துகொண்டு அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.
வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி:
            சிவபெருமானும், நாராயணனனும் ருத்ர வன்னியரிடம் சம்பு பகுதியை ஆட்சி செய்யுமாறு கூறினார்.அதுபோல வடக்கே பாலாறு வரை, பிரம்ம வன்னியரிடமும் பெண்ணையாறு வரை கிருஷ்ண வன்னியரிடமும், வடக்கே காவிரி வரை சம்பு வன்னியரிடமும் தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினார்.
            அதன்பிறகு ருத்ர வன்னியர் மற்றொரு மகனைப் பெற்றார். அவர் பெயர் சந்திர சேகர மகாராஜன். ருத்ர வன்னியர் தன் ஆட்சி பொருப்பை சந்திர சேகர மகாராசனிடம் கொடுத்துவிட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று, இந்திர லோகத்திற்கு சென்றார்!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...