சனி, 22 ஏப்ரல், 2017

"வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை"

((அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மை ))

இந்து மதம் இல்லாமல் வன்னியன் வந்தானா? என்றால், 'ஆம்' என்பதுதான் உண்மை.

வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறோம். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் இந்துவாக மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே நாம் வன்னியர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' ஒரு வன்னியன் என்றே நம்புகிறோம். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்கிறார் திரு. அண்ணல் கண்டர். நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார். அவரது பெயரால் அமைந்த சேரமான் பெருமாள் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள்.

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசா பரூர் கச்சிராயர்கள் தான், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள்.

இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதை நண்பர்கள் உணரவும்.

அதைவிட முக்கியமாக வன்னியர்களுக்கு மதத்தை விட வன்னியச் சாமுதாயமே முதன்மையானது என்பதை நினைவில் நிறுத்தவும்.

நாம் எல்லா மதங்களையும் சமமாகவே பார்க்கிறோம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...