ஞாயிறு, 25 டிசம்பர், 2016

#கடலூர்_தெற்கு_மாவட்டத்தில்_நலிவடைந்து_வரும்_பாமக


பாட்டாளி மக்கள் கட்சி யின்
பெரும் கோட்டையாக திகழ்ந்தது கடலூர் மாவட்டம்..! கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
இருந்த களப்பனி சட்டமன்ற தேர்தலில் இல்லை..அதே போல் சட்ட மன்ற தேர்தலுக்கு
பிறகு பாமக வினர் இருக்கும் இடமும் தெரியவில்லை.2014 ஆம் ஆண்டு ஒவ்வொரு
ஊரிலும் பாட்டாளிகளின் மூவர்ன கொடி பறக்கும்..ஆனால் தற்பொழுது எந்த ஊர்
கிளையிலும் பாமக கொடிகம்பம் இல்லை.
நெடுஞ்சாலைகளிலும் கொடிகம்பம் இல்லை.
இதற்கு முழுமுதற் காரணம் #குழு_அரசியல்
நீ பெரியவனா.? நான் பெரியவனா.?
என்ற நோக்கத்துடன் இருக்கிறார்களே தவிர
களத்திலும் செயல்பாட்டிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும்
இல்லை.இன்னுமொரு பேராபத்தாக இதுவரை இல்லாத #பாஜக பரங்கிப்பேட்டை
ஒன்றியத்தில் காலூன்ற துவங்கியுள்ளது.
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பாஜக என்ற
ஒரு கட்சியை நேற்று தான் பார்த்தேன். அதை
வளர்க்க முற்படுவதும் முன்னாள் பாட்டாளி இளைஞர்கள் தான் என நினைக்கும் போது தான் மனம் வேதனை அடைகிறது.!
ஒன்றிய பொருப்பாளரை குறை சொல்வதா.?
மாவட்ட பொருப்பாளரை குறை சொல்வதா.?
குறை சொல்லி மட்டும் என்ன பயன்.?
ஒரு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைய
வேண்டுமே தவிர .,தேய்மானம் அடைய கூடாது.! வேன்டா வெறுப்புகளை அகற்றி
கட்சி பனி ஆற்றுங்கள்..இல்லையெனில்
தலைமையிடம் கூறிவிட்டு மரியாதையாக
ஒதுங்கிகொள்ளுங்கள்.! தகுதி இல்லாத
நபருக்கு பொருப்பு எதற்கு.?
என்ற கேள்வியை பெரும்பாலான கிராமத்து
இளைஞர்கள் கேட்கின்றனர்.
பதில் கட்சி தலைமையிடம் எதிர்பார்க்கிறார்கள்.!
இவை அனைத்தும் நேற்று நான்
பார்த்தவை மற்றும் கேட்டவை.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...