வெள்ளி, 9 டிசம்பர், 2016

பிடல்_காஸ்ட்ரோ_ஆகிறார்_அன்புமணி

#ஆட்சியை_பிடிக்க_பலே_திட்டம் என்று உப தலைப்பிட்டு, ஏதோ உளறியுள்ளீர்கள்,
உங்கள் உளறல்களுக்கு எப்போதுமே இரட்டை காரணங்கள் உண்டு.
ஒன்று வியாபார ரீதியிலான TRP Rating.
இரண்டாவது பெரும்பான்மை சமூகம் ஆட்சி அதிகாரத்தை எந்த காலத்திலும் கைப்பற்றி விடக்கூடாது என்பது.
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் விவகாரம் வேறு.
கரும்பு விளை நிலமாகிய கியூபாவை, தனது நாட்டின் சர்கரை உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தியது.
அந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்து கியூபா மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவர் பிடல் காஸ்ட்ரோ.
இங்கே பிரட்டீஷ் ஏகாதிபத்தியத்தை 1947ல் உடைத்து எறிந்தாயிற்று.
அதன் பின்னரும்,
மக்கள் தொகை அடிப்படையிலான, சமதர்ம சமூக நீதி வழங்கப் படவில்லை. அத்தகைய சமுகநீதிக்காக போராடிய ஒரு மாபெரும் சமுதாய தலைவர் #தமிழினப்போராளி #மருத்துவர்_அய்யாஅவர்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை நிர்மாணித்த போது,
சமூக நீதி
அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி
அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம்.
என்ற இலட்சியங்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆக,
பாட்டாளிகள் எவருடைய கொள்கை கோட்பாடுகளையும் படியெடுக்கும் நிலையில் இல்லை.
தமிழகத்தில்,
அன்புமணியை எதிர்கொள்ள நீ அன்புமணியாக மாறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...