உலகில் புராணம் கொண்ட ஒரே இனம் வன்னியர் இனம் மட்டுமே! வன்னியர் புராணம் என்பது ஸ்ரீ வீர ருத்ர மகாராசாவின் தோற்றத்தை பற்றி கூறும் நூல். இந்த ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராசாவின் வழிவந்தவர்களே வன்னியர்கள். ஸ்ரீ வீர வன்னிய மகாராசா சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில் பிறந்ததால் சம்பு மைந்தர் காப்பியம் என்றும், வன்னியர் புராணம் என்றும் அழைக்கப்படுகிறது!... வன்னி என்றால் அக்னி என்று பொருள்.
புராணம்:
தூர்வாசகர் முனிவருக்கும், கஜமோகிணிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வீல்வலன்" மற்றும் "வாதாபி" இவர்களின் தாயாரான கஜமோகிணி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வீல்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தான் இதனால் கோபம் அடைந்த அகத்திய மாமுனி வீல்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம் தெற்கு கடற்கறையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னாபுரியை அரசால ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்கன்னியை மணந்தான். இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியார் துணை இருந்தார்.
பின்னர் வாதாபி தேவர்களை அதிகம் துன்புறுத்த ஆரம்பித்தான். இதைகண்ட நாரதமுனி சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களை கூறினார். அதேசமயம் சம்பு மகரிஷி சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள்பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு வன்னி (நெருப்பு) அந்த யாகத்தில் விழச்செய்தார். யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து, வெள்ளை குதிரையில், கையில் வீரவாளுடன் தலையில் கிரிடத்துடன் ஸ்ரீவீர ருத்ர வன்னியர் தோன்றினார்.
சிவபெருமானும்,தாய் பார்வதியும் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர் 1.கிருஷ்ண வன்னியர் 2.பிரம்ம வன்னியர் 3.சம்பு வன்னியர் 4.அக்னி வன்னியர் ஆவார்கள். இவர்களுக்கு காந்தா (சுசிலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் பெயர் இந்திராணி, நாரணி, சுந்தரி, சுமங்கலி
அசுரனுடன் போர்:
சிவப்பெருமாணின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய ருத்ர வன்னியர் சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்கா பரமேஸ்வரியின் கோயிலுக்கு சென்று போரில் தனக்கு துனையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப்படையும் வன்னியருடன் வந்தது. அந்த படையையும் அழைத்துக்கொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாகவே வழி விட்டது. அப்போது அவர்களுடன் சென்ற ஒரு நாயால் கடற்கறையை தாண்ட இயலவில்லை. எனவே அந்த நாய் மீண்டும் வன்னியர் அரண்மனைக்கே திரும்பியது.
ருத்ர வன்னியரும், அவரது படையும் இரத்னாபுரியை அடைந்தவுடன், அசுரன் வாதாபி திருந்த ஒரு வாய்ப்பு தர எண்ணினான். நாரதரை சமாதானம் பேச அனுப்பினார். அது தோல்வியில் முடிந்தது பின்னர் அசுர படைக்கும் வன்னியர் படைக்கும் மாபெரும் போர் மூண்டது. மிக உக்கிரமாக நடந்த அந்த போரில் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உள்பட அனைத்து அசுரர்களும் வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர். இருப்பினும் சுக்ராசாரியார் யோசனைப்படி, நான்கு அசுர பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்து சென்றனர். போர் முழுவதும் முடிந்தவுடன் துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்துக்கு சென்றனர்.
தம் இருப்பிடத்துக்கு சென்ற ருத்ர வன்னியர் மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலை தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயை கண்ட ருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவன்மார்களும் மடிந்து இருப்பார்கள் என தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்து கொண்டணர்.
பிறகு ருத்ர வன்னியரின் நான்கு வீரமகன்களும் தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்துகொண்டு அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.
வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி:
சிவபெருமானும், நாராயணனனும் ருத்ர வன்னியரிடம் சம்பு பகுதியை ஆட்சி செய்யுமாறு கூறினார்.அதுபோல வடக்கே பாலாறு வரை, பிரம்ம வன்னியரிடமும் பெண்ணையாறு வரை கிருஷ்ண வன்னியரிடமும், வடக்கே காவிரி வரை சம்பு வன்னியரிடமும் தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினார்.
அதன்பிறகு ருத்ர வன்னியர் மற்றொரு மகனைப் பெற்றார். அவர் பெயர் சந்திர சேகர மகாராஜன். ருத்ர வன்னியர் தன் ஆட்சி பொருப்பை சந்திர சேகர மகாராசனிடம் கொடுத்துவிட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று, இந்திர லோகத்திற்கு சென்றார்!....
வேதியியல் பயின்றவன் !! என் ஊர் காவேரி டெல்டாவின் கடைசி குக்கிராமம்.! சிதம்பரம்-வட்டம் கடலூர் -மாவட்டம் வட தமிழ்நாடு.!
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017
வன்னியர் வரலாறும் வன்னியர் புராணமும்: :--
வியாழன், 2 பிப்ரவரி, 2017
பிச்சாவரம் சோழ அரச குடும்பத்திற்கு =================================== ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.!
===============================
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் குடமுழுக்கு விழாவில் பிச்சாவரம் சோழ அரச குடும்பத்தினர் பங்கேற்று இறைவனின் ஆசியையும் அவர்களது முன்னோர்களின் ஆசியையும் பெற்றார்கள்.
சோழ அரச குடும்பத்தினர்களுக்கு ஆதரவு நல்கிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. சோழ அரச குடும்பத்தின் கவசம், மழ நாட்டின் பெருமகன் திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கும், டைரக்டர் திரு. வெங்கடேசன் கவுண்டர் அவர்களுக்கும், திரு. செங்கம் சுரேந்திர கவுண்டர் அவர்களுக்கும் மற்றும் சென்னையில் இருந்து சென்று விழா சிறப்பிக்க உதவிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.
அருமை சொந்தங்கள், உடையாளூர் வன்னிய சிங்கம் திரு. ஜேம்ஸ் பாளையப்பட்டு அவர்களுக்கும், இரவு பகல் பாராமல் தொண்டாற்றிய சிதம்பரம் சோழ புலி திரு. நாகரத்தினம் சாம்பசிவம் அகிலன் வல்லத்தரையர் அவர்களுக்கும், வன்னிய பெரும்பிடுகு திரு. ஆனந்த் வாண்டையார் அவர்களுக்கும், வன்னிய புலி சோழநாட்டு சத்ரியன் அவர்களுக்கும், மறைத்திரு வேதையன் ராயர் அவர்களுக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைவர்களுக்கும் நன்றி.
சோழ அரச குடும்பத்தினரிடம் நிரந்தர பாசம்கொண்டு தொண்டாற்றிவரும் எங்கள் க்ஷத்ரிய குல சிம்மன் அருமை அண்ணன் திரு. சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கும், திரு. ரவி சாமி அவர்களுக்கும் நன்றி.
அணைக்கரை வரலாற்று சிங்கம், அருமை அண்ணன் திரு. மணி பாரி அவர்களுக்கும், இணையதள வர்மா வன்னிய வரலாற்று புலி திரு. வசந்த ராஜ படையாட்சியார் அவர்களுக்கும், வன்னிய வரலாற்று போர் வாள் திரு. போதி வர்மன் அவர்களுக்கும், வரலாற்று சிங்கம் திரு. செந்தில் குமார் படையாட்சியார் அவர்களுக்கும், வன்னிய வரலாற்று புலி முனைவர் தியாகராஜ ஆலையப்ப ரெட்டியார் அவர்களுக்கும், வரலாற்று சிங்கம் கலிங்கர் கோன் நரலோகவீரன் அவர்களுக்கும் நன்றி.
பல பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்..!
N.Murali Naicker
வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??
"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...
-
வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'. எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்ம...
-
#சிதம்பரத்தின்_சிவப்பு_பக்கங்கள் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் வன்னிய ஜெமின்தார்கள் ஒருகாலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தா...
-
சத்ரியன் என்பவர் யார்.?? __________________________ அரசாட்சி காலத்தில் ஆயுதம் ஏந்த அணுமதி பெற்றவனே ஷத்ரியன் நாட்...