கிருஷ்ணதேவராயரின் படையெடுப்புக்கு முன்புவரை வன்னியர்கள் பேரினமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் செழிப்புடனும் வாழ்ந்து வந்தோம்.
அதன் பிறகு தொடர்ச்சியாக ஏறத்தாழ சுமார் ஐநூறு ஆண்டுகளாகியும் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வருகிறோம்.
வன்னியர்களுக்கான சமூகநீதி கேட்ட முன்னோடி திரு. அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். இவர் தான் முதன் முதலில் ஒரு சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் அனைத்திலும் இருக்க வேண்டும் என முதன் முதலில் குரல் எழுப்பியவர். 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசால் அமைக்கப்பட்ட சட்ட நிரூப சபையில் வன்னியர்களும் இருக்க வேண்டும் என பிரிட்டிஷ் ராணிக்கு பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டவர். இந்தியாவில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என போராடினார். அதன் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறைய பள்ளிக்கூடங்களை திறந்தது.
1870- களில் சாதி - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வன்னியர்களை தகுதி குறைப்பதற்கன வேலைகள் நடைபெற்றன. அதனை எதிர்த்து குன்னம் முனிசாமி பிள்ளை என்பவர் சாதி சங்கிரக சாரம் என்னும் நூலை எழுதிய போது அவருக்கு பல தரவுகளை தந்து அந்த நூலை பதிப்பிக்க செய்தவர் வெங்கடாசல நாயகர். குன்னம் முனுசாமி பிள்ளை யின் இந்த செய்தியை தெரிந்துகொண்ட நீலகிரியில் பணிபுரிந்த அண்ணாசாமி நாயகர், இது குறித்த விழிப்புணர்வு வன்னியர்களுக்கு வேண்டும் என அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பெரும் தொழிலதிபராக இருந்த கோபால் நாயகருக்கு கடிதம் எழுதுகிறார்.
கோபால் நாயகர் அன்றைய காலக்கட்டத்தில் இரயில் தண்டாவாள தொழிற்சாலை உள்ளிட்ட பெரும் செல்வம் படைத்தவராக இருந்ததால் அவரிடம் உதவி கோரினார் அண்ணாசாமி நாயகர்.
'இது தனிப்பட்ட முறையில் செய்யும் காரியமல்ல.. இதற்கென முழுநேரப் பணியாளர்கள் தேவை என நீலகிரியில் இருந்த அண்ணாசாமி நாயகரை வரவழைத்து சம்பளத்துடன் கூடிய ஆட்களை வைத்து ஆங்காங்கே சிறு - குறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த வன்னியர்களை முழுவதும் திரட்ட துவங்கினர்.
முடிவில் 1875 - ஆம் ஆண்டு சென்னை க.கோபால் நாயகர் அவர்களால் 'வன்னியர் குல சத்ரிய மகா சங்கம்" நிறுவப்பட்டது. மலேசியா, பம்பாய், மைசூர் என உலகெங்கிலும் வாழும் வன்னியர்களை ஒருங்கிணைத்து சங்கம் சிறப்பாக செயல்பட்டுவந்தது.
அப்போது சங்கத்தின் மொத்த நிதி ரூ 22,000 ( இன்றைய கால கட்டத்தில் பல கோடி மதிப்பு) அப்போது திருப்பதி தேவஸ்தான கோவிலின் பணம் ரூ23,000 மட்டுமே தான் என்றால் வன்னியர் குல சத்ரிய மகா சங்கத்தின் வலிமையை நினைத்துப்பாருங்கள்!
இந்த பணத்தை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய இந்தியாவின், ஒரு முக்கிய நிதி நிறுவனமாக இருந்த "அர்பத்நாட் வங்கி" என்ற நிதி நிறுவனத்தில் முதலீடாக செய்து வைத்திருந்தனர். எதிர்பாராத விதமாக 1906 ஆம் ஆண்டு இந்த வங்கி திவாலாகிப்போனது. அத்துடன் சங்கம் தோய்வடைந்து போனது.
வன்னியர் எழுச்சி வரலாற்றில் முதன்முறை காலம் நம்மை வீழ்த்தியது.
அதன் பிறகு சுமார் நாற்பது ஆண்டு கழித்து 1945 - ல் துவங்கி மீண்டும் மாணிக்கவேல் நாயகரும், இராமசாமி படையாட்சியாரும் வன்னியர் எழுச்சியை உருவாக்கி அதில் அரசியல் அதிகார வெற்றியும் கண்டனர். எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத 1952 - தேர்தலில் மணிக்கவேல் நாயகர் ராஜாஜி க்கு ஆதரவளித்து அவரை முதல்வராக்கி அமைச்சரவையில் இடம்பிடித்தார். 1954 - ல் ராமசாமி படையாட்சியும் காமராஜரை முதல்வராக்கி அமைச்சரவையில் இடம் பிடித்தார். வன்னியர் அரசியல் காங்கிரசில் கரைந்து போனது...
வன்னியர் எழுச்சி வரலாற்றில் இரண்டாவது முறையும் அழிந்து போனது. இந்த தானே அழியவில்லை. நம்மை நாமே அழித்துக்கொண்டோம் என்பதே உண்மை.
அதன் பிறகு சுமார் 30 ஆண்டுகள் கழித்து தான் சிதறிய மணிகளைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த சிறு சிறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த வன்னியர் சங்கங்களை மீண்டும் ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தை நிறுவினார் மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள்.
உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு மாபெரும் தொடர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அரசியல் அதிகாரத்திலும் வன்னியர்களுக்கு குறிப்பிட்ட அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்தார்.
வன்னியர் சமூகத்தின் எழுச்சியை அழிக்கவே திராவிட இயக்கங்களும், இன்ன பிற மறைமுக சாதிகளும் ஆழமாக செயல்படுகின்றன. மேற்கூறிய வரலாற்று நிகழ்வை போல 2025 - 2026 ஆம் ஆண்டுகளிலும் வன்னியர் நிகழ்ந்துவிட கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற இந்த இனம் மேலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே கடந்த கால வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.
குறிப்பு: கடந்த 150 ஆண்டு கால வன்னியர் வரலாற்றில் வன்னியர் சமூகம் பிற சாதியினரை தலைவராக ஏற்கவில்லை.