வியாழன், 22 மார்ச், 2018

இராமர் ரத ஊர்வலம் வருவதால் யாருக்கு லாபம்.? யாருக்கு இழப்பு.?

என்னுடைய பார்வையும், நிலைப்பாடும்..

பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் கடைசி ஆயுதமாகவே கருதலாம். அவர்களுக்கு இருக்கும் கடைசி ஒரே ஆயுதம் இந்து மத உணர்ச்சியை தூண்டுவது தான்.
இதனால் இழப்பு பாட்டாளிகளுக்கு தான்.

ஊர்வலம் வரும் முன்னே.. மதக்கலவரம் வரும் பின்னே!

மதக்கலவரம் நடைபெற்றால் அதனை வைத்து இந்துமத அரசியல் செய்யலாமென்பதே அவர்களின் குறிக்கோள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய இந்த இளம் தலைமுறையினரை ஏய்த்து ஓட்டரசியலுக்குட்படுத்தலாம் என்பது அவர்களின் நோக்கம்.

கலவரம் நடந்தால் என்ன நடக்கும்.?

இதுநாள்வரை இந்த தமிழ்மக்களுக்காக பாமக போராடிய போராட்டங்கள் மறக்கச்செய்யப்படும். தமிழகம் முழுவதும் மதக்கலவரமே முதன்மைப்படுத்தப்பட்டு பேசப்படும்.
அன்புமணி என்ற ஆளுமைத்திறன் மழுங்கடிக்கப்படும். இவை அனைத்துமே அவரவரை அறியாமலேயே நடந்தேறும்.

இந்துக்களுக்காக பாஜக போராடுவதுபோன்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டு, அவர்கள் வளர்ச்சிக்காக அப்பாவிகளை பலியாக்க முயற்சிப்பார்கள். மற்ற மாநிலங்களில் கலவரம் செய்து தான் அவர்கள் காலூன்றினார்கள் என்பது கடந்தகால வரலாறு. இதனை மறுக்க முடியுமா.? மறக்க முடியுமா.?

இதுநாள்வரை பாட்டாளியாக இருந்தவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர இந்துவாக, அவர்களை அறியாமலையே மாறிவருவதனை நாம் கண்கூடாக காண்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு பாஜக என்ன செய்துவிட்டது.? காவிரிக்காக தமிழர்கள் போராடிய போராட்டம் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்கிறது. போராடியவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அவர்களை ஏன் பாஜக இந்துவாக பார்க்கவில்லை.??

நாங்க பாஜக வை ஆதரிக்கல.. இந்துவாக இருக்கிறோம் னு சில இளைஞர்கள் கூறுவது நகைப்புக்குரியது. ஆர்.எஸ்.எஸ் ன் சூத்திரமே இந்துவெறியைத்தூண்டி அவர்களை பாஜக வுக்கு ஆதரவாக மாற்றுவது தான்.

இதனை புரிந்துகொள்ளாமல் கலவரத்திற்கு தயாராகும் இஸ்லாமியனும் சரி, இந்து வும் சரி இருவருமே கடைந்தெடுத்த முட்டாளாகவே நான் கருதுகிறேன்.

பாஜக வின் சூழ்ச்சியை எதிர்ப்பதால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவென்று கருதுவது மாபெரும் அறியாமை.

இஸ்லாமியர்கள் அனைவரும் உத்தமர்கள் என எவரும் கூற முடியாது. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் ம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிற்கு சற்றும் சளைத்தது இல்லை. இரண்டுமே தமிழகத்தில் வேறறுக்கப்பட வேண்டியவைகள் தான்.

சக தமிழனாக, பாட்டாளியாக என்னுடைய பார்வை இது தான். இதுவே உண்மையும் கூட.

சமூகநீதி காக்கப்பட வேண்டும்!

   -- உத்தமன் 'இரா.இராஜேஷ்.Bsc.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியசாதிப்பிள்ளைகள்

வன்னிய சாதிப்பிள்ளைகள்: -------------------- இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுக...